ஒரு நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் செல்லும் போது எந்த வேலைக்கு போவதென்றாலும் சரி, நீங்கள் எந்தவிதமான பணமும் கட்ட வேண்டிய அவசியமில்லை.
Test க்கு போவதற்கு முன்னர், Main Test க்கு உண்டான பணத்தை மட்டுமே கட்ட சொல்வார்கள். அத்தோடு IP வந்த பின்னர் அந்த கன்பனிக்கு உண்டான பணத்தைக் கட்ட சொல்வார்கள்.
PCM, Shipyard இல் எல்லாம் உங்களை Interview மட்டும் செல்ல சொல்வார்கள். அதோடு IP வந்த பின்னர் பணத்தைக் கட்டிட்டு சிங்கப்பூர் போகலாம். இது தான் முன்னர் இருந்த நிலை.
ஆனால், தற்போது 2024 இல் உங்களிடமிருந்து முன்பணம் ஒன்றைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது உங்களது Passport ஐ அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள்.
இப்போதெல்லாம் Work Permit, Shipyard Permit க்கே முன்பணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்போது, ஏன் பணம் கட்ட சொல்கிறார்கள், எவ்வளவு பணம் கட்டலாம், யாரிடம் பணம் கட்ட வேண்டும், யாரிடம் பணம் கட்ட கூடாது போன்ற விடயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
நீங்கள் உங்களுக்கு சிங்கப்பூர் வேலை ஒன்று வேண்டும் என கேட்கும் போது, இப்போதெல்லாம் நல்ல ஏஜண்ட் கூட முன்பணம் வாங்குகிறார்கள்.
இவர்கள் ஏன் தற்போது முன்பணம் வாங்குகிறார்கள் என்றால், நீங்கள் ஒரு வேலைக்கு Apply செய்ய உங்களது Documents குடுக்கும் போது அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு அதை கம்பனிகளுக்கு கொடுத்து அதன் பின்னர் உங்களுக்குறிய IP உம் வந்துவிடும்.
இதற்கிடையில், நிறைய செயன்முறைகள் நடைபெற்றிருக்கும், அத்தோடு சில செலவுகளும் ஏஜண்ட்க்கு ஏற்பட்டிருக்கும்.
இந்த சமயத்தில், Apply செய்த நபர் IP வந்த பின்னர் வேலைக்கு வர முடியாது என்று சொல்லும் பட்சத்தில், IP ஐ Cancel பன்ன வேண்டியிருக்கும்.
இப்படி அதிகமானோர் சொல்லும்போது, IP ஐ Cancel பன்னுவதால் அந்த கம்பனி சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன், ஏஜண்ட் மற்றும் கம்பனிகளுக்கிடையிலான உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது.
ஆனால், முன்பனம் வாங்கும் போது பணம் கட்டிவிட்டோம், வேலைக்குப் போகத்தான் வேண்டும் என்ற கட்டாயம் உங்களிடம் வந்து விடும்.
இந்த விடயத்தின் காரணமாகத்தான் தற்போது நல்ல ஏஜண்ட்களும் கூட முன்பனம் வாங்குகிறார்கள்.
சரி, தற்போது எவ்வளவு பணம் கொடுக்கலாம் என பார்ப்போம்.
நல்ல ஏஜண்டுகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களது வேலையைப் பற்றி உங்களுக்கு தெளிவூட்டுவார்கள். அதில் எவ்வளவு நேரம் வேலை, சம்பளம் எவ்வளது, Overtime செய்யலாமா போன்ற தகவல்களை அவர்கள் உங்களுக்கு சொல்லுவார்கள்.
நல்ல ஏஜண்ட்களைத் தவிர்த்து ஏமாற்றுபவர்களும் தற்போது அதிகமாவே உள்ளார்கள்.
குறிப்பிட்ட வேலையே இல்லாவிட்டாலும் கூட அந்த வேலை இருக்கு என கூறிக்கொண்டு அதிக முன்பணம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.
பணத்தை வாங்கிவிட்டு நாட்களை இழுத்தடித்து உங்களை ஏமாற்றி விடுகிறார்கள்.
இதிலிருந்து எவ்வாறு தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், வேலைக்கு Apply செய்யும் போது ஒரு செலவு ஒன்று ஆகும். அது, பெரும்பாலும் 20,000 ரூபாய்க்கு உள்ளேயே இருக்கும்.
எனவே அந்த Apply பன்னுவதற்குறிய செலவை மட்டும் நீங்கள் கொடுப்பது சிறந்தது. இந்த பணமும் கூட உங்களுக்கு நன்றாக தெரிந்த ஏஜண்டாக இருந்தால் மட்டுமே கொடுங்கள்.
அவர்கள் ஏமாற்றும் பட்சத்தில் கொடுத்த பணத்தை எப்படி அவர்களிடம் இருந்து வாங்க முடியும் என்பதைப் பற்றிய தெளிவுடனும் இருக்க வேண்டும்.
IP வந்த பின்னர் முழு பணத்தையும் கொடுத்து அதன் பின்னர் சிங்கப்பூர் செல்வது நல்லது.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூர் வேலைக்கு Skill Test அடிக்காமல் நல்ல சம்பளத்துடன் வர வேண்டுமா? PSA தான் இதற்கான பெஸ்ட் சாய்ஸ்
- சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? முதலில் ஏஜென்சி நம்பகமானது தானா என்று தெரியணுமா?
- இந்தியாவில் டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் வந்த பிறகு டெஸ்ட் அடித்து வேலைக்கு சேரனுமா?வழிமுறை இதோ!
- சிங்கப்பூருக்கு வெறும் இரண்டு வாரத்தில் வேலைக்கு வர உதவும் TEP Pass
- சிங்கப்பூரில் வேலைக்கு வர ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைக்கொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்கள் கைக்கு