இப்போதெல்லாம் சிங்கப்பூர் வேலை என சொல்லும் போது அதைப் பெறுவது கடினமாகத்தான் மாறி வருகிறது.
ஆனால், நம்மிடம் ஆரம்பத்தில் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் அதை ஏஜண்ட் கிட்ட கொடுத்துட்டு எப்படியாவது சிங்கப்பூர் வந்துவிட வேண்டும் என நம்மில் அதிகமானோர் நினைப்பதுண்டு.
அதிலும் ஒரு சிக்கல் இருக்கு, என்னவென்றால் ஆரம்பத்தொகையாக கட்ட வேண்டிய பணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், நாம் சிங்கப்பூர் சென்று சம்பாதிக்கும் பணமும் ஏஜண்ட்க்கு கொடுக்கும் பணமும் சரி சமமாக இருந்தால் என்ன செய்வதென்ற அச்சம் நம்முள் அதிகமானோருக்குள் எழுவதுண்டு.
இங்கே ஏஜண்ட்க்கு கொடுக்கும் பணம் இல்லாமல் போனால் சிறப்பாக இருக்கும் அல்லவா?
அந்தவகையில், இங்கே ஏஜண்ட் என்ற சொல்லிற்கே இடம் இல்லாமல் எப்படி சிங்கப்பூர் வேலைக்கு டிரை பன்னுவது பற்றி பார்ப்போம்.
குறிப்பாக, வேலை தேடுபவர்களுக்கு லிங்க்ட்இன் முதன்மையான தளமாக மாறிவருகிறது. அது ஏன் தெரியுமா?
விளையாட்டும் பொழுதுபோக்கும் லிங்க்ட்இன்னின் நோக்கமல்ல, மாறாக அங்கு அறிவை பகிர்வது, வேலைவாய்ப்புகள் சம்மந்தமான விடயங்களைப் பற்றி பகிர்வது, அறிவியல், தொழில்நுட்பம் இவற்றைப் பற்றி பேசுவதுதான் முக்கியம்.
தொடக்கநிறுவனங்கள் (startups) முதல் பெருநிறுவனங்கள் வரை, முக்கிய நபர்கள் கூடும் இடம் என்னவென்றால் அது LinkedIn தான்.
நீங்கள், லிங்க்ட்இன்னை சிறப்பாக பயன்படுத்த உங்கள் சுயவிவரத்தை (resume) பதிவேற்றம் செய்து, Open என்ற நிலையை தேர்ந்தெடுங்கள்.
இதன் மூலமாக உங்களுக்கு சில நேர்காணல் அழைப்புகள் கிடைக்கப்பெறலாம். சிறப்பு என்னவென்றால், இதில் இடைத்தரகர்கள் கிடையாது. மாற்றமாக, நிறுவனங்களே நேரடியாக உங்களை தொடர்பு கொள்ளும்.
சிங்கப்பூரில் லிங்க்ட்இன் மூலமாக வேலை தேட விரும்புகிறீர்களா? கீழுள்ள படிமுறையைப் பின்பற்றுங்கள்:
LinkedIn என்ற இணையதளத்திற்கு சென்று, உங்களுக்கு கணக்கு இல்லையென்றால், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து புதிதாக பதிவு செய்துகொள்ளுங்கள்.
அதில், உங்களது அண்மைய சுயவிவரத்தை பதிவேற்றுங்கள். பிறகு, Jobs என்ற பகுதியை சொடுக்குங்கள். அதில், தேடல் பட்டியில் Singapore என தட்டச்சு செய்து, தோன்றும் பட்டியலில் இருந்து Jobs என்பதை தேர்வுசெய்யவும்.
வேலைவகை, தொழில்துறை, அனுபவம் போன்றவற்றைப் பொருத்து வேலையைத் தேட Filter என்ற தேர்வை பயன்படுத்துங்கள். வேலைவாய்ப்பு பட்டியலை முற்றிலும் படித்து, அதில் கம்பனி குறிப்ப்பிட்டுள்ள குறிப்புகள் மற்றும் தேவைகளை படியுங்கள்.
உங்களுக்கு விருப்பமான வேலை ஏதேனும் கிடைத்தால் அதன் Apply பொத்தானை அழுத்தி நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.
அதே வேலைக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதையும் பார்க்கலாம். விண்ணப்பித்த பின் உங்களின் சுயவிவரம் படிக்கும் நபருக்கு பிடித்திருந்தால், அவர்கள் நேர்காணலுக்காக உங்களை தொடர்புகொள்வார்கள்.
முக்கிய விடயம் என்னவென்றால், உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிட வேண்டாம். ஏனெனில், அப்ளை செய்துவிட்டு, என்ன ஒரு இண்டர்வீவ் கோல் ஒன்றும் வரவில்லை என தளர்ந்து விட வேண்டாம்.
தினமும் LinkedIn ஐப் பாருங்கள், மேற்கூறப்பட்ட படிமுறைகளைப் பின்பற்றி வேலையைத் தேடுங்கள். தினமும் புதிய புதிய வேலைகள் அதில் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். பொருத்தமான எல்லா வேலைக்கும் அப்ளை செய்யுங்கள்.
தொடர்ந்து முயற்சி செய்யும் போது நிச்சயமாக உங்களுக்கு வேலை கிடைக்கும். லிங்க்ட்இன் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை தரகர்களுக்கு செலவழிக்காமல் சிங்கப்பூரில் வேலை தேடுவதில் நீங்கள் தனித்து நிற்கலாம்.
மேலும் வாசிக்க
- யாரெல்லாம் சிங்கப்பூரில் Dependent Pass (DP) எடுக்கலாம்? வேலை வாய்ப்புகள் DPயில் இருந்தால் எப்படி இருக்கும்?
- சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? முதலில் ஏஜென்சி நம்பகமானது தானா என்று தெரியணுமா?
- இந்தியாவில் டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் வந்த பிறகு டெஸ்ட் அடித்து வேலைக்கு சேரனுமா?வழிமுறை இதோ!
- சிங்கப்பூருக்கு வெறும் இரண்டு வாரத்தில் வேலைக்கு வர உதவும் TEP Pass
- ஜூலை முதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு