Wednesday, September 18, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கரம் கொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்களுக்கு கிடைக்கிறது

சிங்கப்பூரில் ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கரம் கொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்களுக்கு கிடைக்கிறது

சிங்கப்பூரில் வேலை கிடைப்பதென்பது இப்போதெல்லாம் கடினமாகத்தான் அமைகிறது. அதுவும் கையிலே பணம் இல்லை எனின் மிக மிகக் கடினமாகும்.

கையில் பணம் இருந்தால் அதை ஏஜெண்டிடம் கட்டிவிட்டு சிங்கப்பூர் வந்துவிட வேண்டும் என அதிகமானோர் இருக்கிறார்கள்.

ஆனால், அதிலே சில சிக்கல்கள் உள்ளன, என்னவென்றால் ஏஜண்ட் கட்டணமாக ஆரம்பத்தில் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. அத்தோடு, சிங்கப்பூர் சென்று சம்பாதிக்கும் பணமும் ஏஜண்ட்க்கு செலுத்தும் பணமும் சமமாக இருந்தால் என்ன செய்வதென்ற பயமே எம்முள் அதிகமானோருக்கு உண்டு.

இங்கே, ஏஜண்டுக்கு கொடுக்கும் பணமும் இல்லாமல், பெரும் தொகை ஒன்று செலவு பண்ணாமல் சிங்கப்பூர் வேலைக்குச் சென்றால் சிறப்பாக இருக்கும் அல்லவா.

அந்தவகையில், இங்கே ஏஜெண்டே இல்லாமல் எப்படி சிங்கப்பூரில் வேலைக்கு செல்லுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

சிங்கப்பூரில் வேலை தேடுவதற்கென சிங்கப்பூர் அரசின் மூலமாகவும் வேறு நிறுவனங்கள் மூலமாகவும் பல வலைத்தளங்கள் நடாத்தப்படுகிறன.

ஆனால், இத் தளங்களில் குறிப்பிட்டளவு வேலைகளைத்தான் பதிவிடுவார்கள். அனைத்து வகையான வேலைவாய்ப்புகளை அறிய வேண்டுமெனின் நீங்கள் செல்ல வேண்டிய ஒரே தளம் லிங்டின் தான்.

லிங்க்டினும் ஒரு சமூக வலைத்தளம் தான்! ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று நேரத்தை வீணடிக்கும் தளமாக இல்லாமல் அறிவை வளர்த்துக்கொள்ளுவது தொடர்பாக, மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான தளமாகும்.

சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை, முக்கிய எல்லோரும் இருக்கும் இடம்தான் லிங்க்டின் ஆகும்.

நீங்கள், லிங்டினை பயனுள்ளதாக பயன்படுத்த உங்கள் சுயவிவரத்தை (Updated Resume) பதிவேற்றம் செய்து, Open என்ற நிலையை தேர்ந்தெடுங்கள்.

அன்றாடம் வேலைவாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். வேலைவாய்ப்புகளுக்கு அப்ளை செய்த பின்னர் உங்களுக்கு சில நேர்காணல் அழைப்புகள் கிடைக்கப்பெறலாம். லிங்டினின் சிறப்பம்சம் யாதெனின், இங்கே இடைத்தரகர்கள் கிடையாது. பதிலாக, நிறுவனங்களே (HR) நேரடியாக உங்களை தொடர்பு கொள்ளுவார்கள்.

சிங்கப்பூரில் லிங்க்டின் மூலமாக வேலை தேட விருப்பம் எனின், கீழுள்ள படிமுறையைப் பின்பற்றுங்கள்:

LinkedIn தளத்திற்குச் சென்று (Browserயின் ஊடாகவோ அல்லது Mobile Appயினூடாகவோ), உங்களுக்கு கணக்கு இல்லையென்றால், ஈமெயில் மற்றும் பாஸ்வேட் கொடுத்து கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள்.

அதில், உங்களது அப்டேடட் ஆன சுயவிவரத்தை (Resume) பதிவேற்றுங்கள். பிறகு, Jobs என்ற பகுதிக்கு செல்லுங்கள். அதில், தேடல் பட்டியில் Singapore என டைப் செய்து, பட்டியலில் இருந்து Jobs என்பதை தேர்வுசெய்யவும்.

வேலைவகை, தொழில்துறை, அனுபவம் போன்றவற்றைப் பொருத்து வேலையைத் தேட Filter ஐ பயன்படுத்துங்கள். வேலைவாய்ப்பு பட்டியலை முற்றிலும் படித்து, அதில் கம்பனிகள் கூறியுள்ள குறிப்புகள் மற்றும் தேவைகளை படியுங்கள்.

மிக முக்கியமான விடயம், கம்பெனிகள் குறிப்பிடுகின்ற விடயங்கள் உங்களது Resume உடன் ஒத்துப்போனால் மட்டுமே அப்ளை செய்யுங்கள். இல்லையெனின் அப்ளை செய்ய வேண்டாம்.

ஏனெனில், அதிகமான கம்பனிகள் தற்போது Applicant Tracking System ஐ பயன்படுத்துகின்றன. அதிலே, அவர்கள் குறிப்பிட்ட விடயங்களுடன் உங்களது CV ஒத்துப்போகவில்லை எனின், உடனடியாக Reject செய்யப்படும்.

உங்களுக்கு விருப்பமான வேலை ஏதேனும் காணப்படின் அதன் Apply பொத்தானை அழுத்தி நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.

மேலும், அதே வேலைக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதையும் நீங்கள் பார்க்கலாம். முக்கிய விடயம் என்னவென்றால், உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிட வேண்டாம்.

தினமும் LinkedIn ஐப் பாருங்கள், மேற்கூறப்பட்ட படிமுறைகளைப் பின்பற்றி வேலையைத் தேடுங்கள். தினமும் புதிய புதிய வேலைகள் அதில் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். பொருத்தமான எல்லா வேலைக்கும் அப்ளை செய்யுங்கள்.

LinkedIn இல் ஒரு சிறப்பான அம்சம் உள்ளது, அது தான் LinkedIn Premium ஆகும். இது என்னவென்றால் இலவசமாக LinkedIn ஐப் பயன்படுத்துவதைப் பார்க்க LinkedIn Premium இல் அதிகளவான வேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்கள், உங்களுடைய கணக்கை அதிகமானோருக்கு தெரியப்படுத்தும் அம்சம் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது!

எனவே, வேலை தேடுகிறீர்கள் எனின், LinkedIn Premium ஐப் பயன்படுத்துங்கள். ஏனெனில், இலவசமாக பயன்படுத்துவதைப் பார்க்க அதிக வேலை வாய்ப்புக்களை இது காட்டும்.

LinkedIn இன் Premium ஆனது உங்களது முழு விவரத்தையும் வைத்துக்கொண்டு உங்களது விபரம் பொருந்தும் கம்பனி வேலைகளை உங்களுக்கு காண்பிக்கும்.

உதாரணமாக, சிங்கப்பூரில் Electrical Engineer ஆக செல்ல முயற்சிக்கிறீர்கள் எனின், என்னென்ன Electrical Engineering உடன் தொடர்பாக வேலைகள் வருகிறதோ அவை அனைத்தையும் உடனே காட்டிவிடும். LinkedIn இலவசமாக பயன்படுத்தும் போது குறிப்பிட்ட அளவான வேலைகளையே காட்டும். ஆனால், Premium இல் எல்லா வேலைகளையும் உடனடியாகவே காட்டிவிடும்.

மேலும், Electrical Engineering தொடர்பான புதிய வேலைகள் கம்பனிகளால் பதிவிடும் போது அது உங்களுக்கு உடனே கிடைக்க வேண்டும் எனின், LinkedIn இல் அந்த வேலை வரும் போது அது தொடர்பாக Email கிடைக்கும் படி செய்து கொள்ளலாம்.

புதிய வேலைகள் வரும் போது உடனடியாக Apply செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு LinkedIn Premium ஆனது இலவசமாக கிடைக்கும். எனவே, இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்தி தேடுங்கள்.

LinkedIn மூலம் சிங்கப்பூர் வந்தவர்கள் ஏராளமானோர்கள் உள்ளனர். தொடர்ந்து முயற்சி செய்யும் போது நிச்சயமாக உங்களுக்கு வேலை கிடைக்கும். 

லிங்க்ட்இன் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை தரகர்களுக்கு செலவழிக்காமல் சிங்கப்பூரில் வேலை தேடுவதில் நீங்கள் தனித்து நிற்கலாம்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments