Sunday, December 8, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? ஏஜென்சி நம்பகமானது என தெரியணுமா? MOMயின் பட்டியல் இதோ!

சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? ஏஜென்சி நம்பகமானது என தெரியணுமா? MOMயின் பட்டியல் இதோ!

சிங்கப்பூரில் வேலை பெறுவது ஏஜென்ட் உதவி இல்லாமல் கடினமாக இருக்கலாம். Indeed, Jobstreet போன்ற வேலை தேடும் இணையதளங்களின் உதவியுடன் சிங்கப்பூர் வேலைகளை எளிதாகத் தேட முடிந்தாலும், அதிகமானோர் இன்னும் ஏஜென்டை தான் நம்பி இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் வேலை பெற்றுக்கொடுப்பதற்கு உண்மையான ஏஜன்டைப் போலவே அதிகமான போலி ஏஜன்டும் உள்ளார்கள்.

போலி வேலைகளை அடையாளம் காண்பது சவாலான விஷயம் தான். சில சமயங்களில், இந்த போலி முகவர்கள் வேலை உறுதி என்று கூறிக்கொண்டு 3 தொடக்கம் 5 லட்சங்கள் வரை பணம் கேட்கிறார்கள்.

நீங்கள் பணம் செலுத்திய பிறகு, அவர்கள் எந்த பதிலும் தராமல் சாக்குபோக்கு சொல்லி மாதக்கணக்கில் காக்க வைக்கிறார்கள். இப்படி பல பேரிடம் ஏமாற்று வேலை செய்து இலகுவாக சம்பாதித்துவிடுகிறார்கள். 

பணம் கொடுத்தவர் போலீஸாரிடம் போகும் வரை அந்த பணத்தை அவர்கள் வைத்துக்கொண்டு அதை எங்காவது முதலீடு செய்து ஏஜன்ட் காசு சம்பாரிக்கிறார்கள்.

பணம் கொடுத்தவர் போலீசாரிடம் முறையிடப்போகிறார் எனும் போது தான் கொடுத்த பணத்தை ஏஜன்ட் திரும்ப செலுத்துகிறார்கள்.

தற்போது பல்வேறு வழிமுறைகளில் ஏமாற்று வேலைகள் நடைபெறுகிறன.

இந்த ஏஜன்ட்கள் உண்மையானவர்களா அல்லது போலியானவர்களா என்பதைச் சரிபார்க்க ஒரு வழி இருக்கிறது.

இந்த இணைய இணைப்பில், மனிதவள அமைச்சகத்தினால் வழங்கப்படும் ஏஜன்ட் பட்டியல் உள்ளன.

இதில், ஏஜன்சியினுடைய பெயர் அல்லது அவர்களது Licence இலக்கத்தை கொடுப்பதன் மூலம் ஏஜன்டினுடைய முழு விவரத்தையும் அறிய முடியும். 

இந்த பட்டியலில் அவர்களது முன்னைய வாடிக்கையாளர்களின் மதிப்பீடுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஏஜன்ட்களை அலசி ஆராயலாம்.

பட்டியலில் இருந்து ஏஜன்டை பார்க்கும் போது, ​​அவர்கள் எத்தனை பேருக்கு வெற்றிகரமாக வேலை வாங்கிக்கொடுத்துள்ளார்கள், பணம் திரும்பப் பெறுதல் அல்லது தக்கவைப்பு, அவர்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் முகவரி போன்ற விரிவான தகவல்களைப் பார்க்க முடியும். 

அத்துடன், வீட்டுப் பணிப்பெண்ணை தேர்வு செய்யும் ஏஜன்ட் தொடர்பான தகவல்களையும் இங்கே பார்க்க முடியும்.

ஏமாற்றும் ஏஜன்ட்களிடம் சிக்காமல் இருக்க, மனிதவள அமைச்சகம் (MOM) அறிவுறுத்தியபடி, Revocation, Suspension, Surveillance பட்டியலின் கீழ் உள்ள நிறுவனங்களைத் தவிர்க்கவும். அத்துடன், நிறுவனத்தின் அனுபவத்தையும் கவனியுங்கள்.

சிங்கப்பூர் அரசாங்க விதிகளைப் பின்பற்றாத ஏஜன்சிகள் demerit points வைத்திருக்கும். எனவே அவர்களைத் தவிர்ப்பது நல்லது.

போலி ஏஜென்ஸியிடமிருந்து தப்பிப்பத்தற்கு நீங்கள் கீழ்வரும் முறையைப் பின்பற்றுங்கள்.

ஏஜன்டுடன் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் போது தெளிவாக எல்லா விடயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களின் விவரங்களையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இதிலே, முகவரின் கமிஷன் தொகை, பயண மற்றும் நிர்வாகச் செலவுகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் என்பன உள்ளடங்கும்.

ஒப்பந்தத்தை முழுமையாகப் படிப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, விதிமுறைகளில் கவனம் செலுத்துங்கள்.

இதில் உங்கள் உரிமைகள் என்னென்ன, முகவரின் கடமைகள் அத்துடன் ரத்து செய்வதற்கான விதிமுறைகள் என்பன அடங்கும்.

ஒப்பந்தத்தில் ஏதேனும் தெளிவற்ற பகுதிகள் இருந்தால், கையெழுத்திடுவதற்கு முன் ஏஜன்டிடம் அல்லது அல்லது இந்த துறையில் அனுபவம் உள்ள யாரிடமும் ஆலோசனையை நாடுவது நல்லது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments