திறமையானவர்களைக் கவரும் மையமாக சிங்கப்பூர் நீண்ட காலமாகவே விளங்குகிறது.
சிங்கப்பூர், ‘ஒன் பாஸ்’ (ONE Pass) என்றழைக்கப்படும் அதன் முதன்மை பணி அனுமதி திட்டத்தில் 2023ல் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
இது வெளிநாட்டுத் தொழில் வல்லுநர்கள், புத்தாக்கம் செய்வோர், தொழில்முனைவோர் ஆகியோரை சிங்கப்பூரை நோக்கி ஈர்ப்பதில் மிகவும் கவனம் செலுத்துகிறது.
உயர்மட்ட வெளிநாட்டுத் திறமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ‘ஒன் பாஸ்’ திட்டம், மாதம் குறைந்தபட்சம் S$30,000 வருமானம் என்ற தகுதி அளவுகோலுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
முன்பு S$18,000 ஆக இருந்த இந்தத் தொகை உயர்த்தப்பட்டது.
உலகளாவிய திறமையாளர்களில் மிகச்சிறந்தவர்களைக் கவரும் ஒரு நுட்பமான செயல் இது ஆகும்.
அத்துடன், ஒன் பாஸ் அனுமதிகளுக்கு 4,200 என்ற கோட்டாவையும் அரசு விதித்துள்ளது. இது எண்ணிக்கையை விட தரத்திற்கே முக்கியத்துவம் என்பதை வலியுறுத்துகிறது.
சிங்கப்பூரில் தங்கள் திறமையை வெளிப்படுத்த வருபவர்கள், தத்தம் துறைகளிலேயே உண்மையில் தலைசிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
சம்பள வரம்பை உயர்த்துவதன் மூலமும், கோட்டாவை அறிமுகம் செய்வதன் மூலமும், உலக அரங்கில் தன் போட்டித்தன்மையைச் சிங்கப்பூர் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.
நாட்டின் பொருளாதாரச் சூழலுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கும் திறனுள்ளவர்களை அது ஈர்க்கிறது என்பதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உந்திச் செல்லக்கூடிய உயர்மதிப்பு படைப்பாளிகள், புத்தாக்கம் செய்வோர், தொழில்முனைவோர் ஆகியோரையே அரசு குறிவைக்கிறது.
இந்த நிலையில், ஒன் பாஸ் பெறுவதற்கான தகுதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் S$30,000 சம்பள வரம்பின் மூலம் தங்கள் நிதித் திறனை மட்டுமின்றி, சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு அளிக்கும் தங்கள் தனிச்சிறந்த சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் நிரூபிக்க வேண்டும்.
வணிகம், கல்வி, கலை அல்லது விளையாட்டு என எந்தத் துறையானாலும், சிங்கப்பூரிற்கு வளம் சேர்க்கும் திறன் விண்ணப்பதாரர்களிடம் இருக்கிறதா என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
ஒன் பாஸ் விண்ணப்பங்களை சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (MOM) மிகுந்த கவனத்துடன் ஆராயும்.
ஒவ்வொரு விண்ணப்பமும் அதன் தனித்தன்மை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். தங்கள் தகுதிகள், சாதனைகள், சிங்கப்பூரில் தங்குவதற்கான திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டியிருக்கும்.
மேலும் வாசிக்க