Wednesday, October 30, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் Overtime வேலைக்கு எவ்வளவு தருகிறார்கள்? எப்படி கணக்கிடப்படுகிறது? எவ்வளவு கொடுக்க வேண்டும்!

சிங்கப்பூரில் Overtime வேலைக்கு எவ்வளவு தருகிறார்கள்? எப்படி கணக்கிடப்படுகிறது? எவ்வளவு கொடுக்க வேண்டும்!

சிங்கப்பூரில் வேலைக்கு என பல்வேறு Passயினூடாக வந்தாலும் சம்பளம் எனும் போது அது வேலைக்கு ஏற்றாற்போல் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

அந்தவகையில் வேலை நேரம் என குறிப்பிட்ட நேரம் இருக்கும். அதாவது ஒரு நாளில் 8 மணிநேரம், 10 மணிநேரம் என வேலைக்கு ஏற்றாற்போல் மாறும்.

அதிலும், பெரும்பாலான வேலைகளில் OT (Over Time) என்பது காணப்படும். Over Time வேலை செய்ய வேண்டும் என கட்டாயமில்லை. 

உங்களுக்கு விருப்பம் இருந்தால் மற்றும் சம்பளம் அதிகமாக வேண்டும் என்றால் Over Time செய்ய முடியும்.

Over Timeக்கு என சம்பளம் அடிப்படை சம்பளத்தை விட மேலதிகமாக வேலை செய்யும் நேரத்தைப் பொருத்து வழங்கப்படும்.

Over Time இன் அளவு கம்பனிக்கு கம்பனி மாறுபடும். சில கம்பனிகளில் அதிகபட்சமாக 2 மணித்தியாலங்கள், 3 மணித்தியாலங்கள் என வழங்கப்ப்படும். கம்பனி வழங்குகின்ற நேர அளவின் அடிப்படையில் வேலை செய்ய முடியும்.

இப்போது ஒவ்வொரு வேலைக்கும் எப்படி Over Time கணக்கிடுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

சிங்கப்பூரில் General Worker ஆக வருபவர்களுக்கு பெரும்பாலும் நாட்களின் அடிப்படையில் சம்பளமானது வழங்கப்படும். பெரும்பாலும் நாள் சம்பளமானது SGD $18 முதல் SGD $20 வரை வழங்கப்படும்.

Over Time க்கு என சம்பளமானது அடிப்படை சம்பளத்தை விட 1.5 மடங்கு அல்லது 2 மடங்காக வழங்கப்படும். 

அதாவது ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை, SGD $20 எனும் போது ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளமானது $2 ஆகும்.

Over Time எனும் போது 1.5 மடங்கு எனின் மணி நேரத்திற்கான சம்பளமானது $3 ஆகும். மாதத்திற்கு 70 மணிநேரம் Over Time எனின் மேலதிக சம்பளமானது 70 × 3 = SGD $210 கிடைக்கப்பெறும்.

அல்லது OTக்கான சம்பளமானது இரண்டு மடங்கு எனின் மாதத்திற்கு 70 மணி நேரம் OT செய்தால் 70 × 4 = SGD $280 கிடைக்கப்பெறும்.

1.5 மடங்கு என எடுத்துக்கொண்டு மொத்த சம்பளத்தைப் பார்த்தால் மாதத்திற்கு SGD $600 உம் OT ஆக SGD $210 உம் மொத்தமாக SGD $810 கிடைக்கப்பெறும்.

ஒவ்வொரு நாளும் Over Time செய்யும் போது எவ்வளவு நேரம் செய்கிறீர்கள் என்பதை கட்டாயமாக குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.

அத்துடன் Over Timeக்கான சம்பளத்தையும் குறிப்பெடுத்து சம்பளம் வரும் போது நீங்கள் கணக்கிட்ட சம்பளமும் கிடைக்கப்பெற்ற சம்பளமும் சமமாக இருக்கிறதா என்பதைக் கட்டாயம் பாருங்கள்.

அப்படி இல்லை எனின், நீங்கள் கம்பனியில் இது தொடர்பாக கேட்க முடியும். சில வேலை சம்பளம் கணக்கிடும் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எனவே, கேட்டு விசாரிப்பதன் மூலம் உங்களுக்கான சம்பளத்தொகையை சரியாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும், IP இலேயே சம்பளத்தொகையானது குறிப்பிடப்பட்டிருக்கும். வேலைக்கு கம்பனிக்கு வந்த பின்னர் அந்த தொகையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments