Saturday, December 7, 2024
Homeசிங்கப்பூர்இந்திய Driving Licenceயை வைத்து சிங்கப்பூர் Licenceயை எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

இந்திய Driving Licenceயை வைத்து சிங்கப்பூர் Licenceயை எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

பெரும்பாலும் சிங்கப்பூர் வருபவர்கள் எல்லோரும் கட்டாயம் நமது நாட்டிலே Licence எடுத்திருப்போம். 

நமது நாட்டில் Licence எடுப்பதற்கும் சிங்கப்பூரில் Licence எடுப்பதற்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கிறன. கட்டும் பணமாக இருந்தாலும் சரி, படித்து Exam Pass ஆகி Licence எடுப்பதென்றாலும் சரி எல்லாவற்றிலும் வித்தியாசங்கள் இருக்கிறன.

இந்திய Licence வைத்திருந்திர்களானால் அதை வைத்தே சிங்கப்பூரில் Licence எடுத்து விட முடியும். இதனை Convert பன்னி Licence எடுப்பது என கூறுவார்கள்.

Convert செய்து Licence எடுப்பதன் மூலம் அதில் நன்மைகள், குறைபாடுகள் என இரண்டு வகையும் உண்டு.

நன்மைகளாக நேரடியாக சிங்கப்பூர் Licence எடுப்பதைப் பார்க்க செலவு குறைவாகும். குறைபாடு என பார்க்கும் போது நீங்கள் Licence தொடர்பாக நிறைய இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். அதே போன்று Licence எடுப்பதற்கான கால அவகாசமும் கூடுதலாக இருக்கும்.

சிங்கப்பூரில் நேரடியாக எப்படி Licence எடுப்பது, எவ்வளவு செலவாகும், Exams எப்படி இருக்கும் என பல்வேறு வகையான தகவல்கள்களை கீழே உள்ள பதிவில் குறிப்பிட்டிருப்போம். அதை படித்து தெரிந்து கொள்ள முடியும்.

சிங்கப்பூரில் Driving Licence எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்? புதிய விதிமுறைகள் என்னென்ன?

சரி, இப்போது எப்படி சிங்கப்பூரில் Convert செய்து Licence எடுப்பது என்பதைப் பார்ப்போம்.

முதலில், உங்களது Passport இல் உள்ள உங்களது பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி என்பன உங்களது Licence இலும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பின்னர், சிங்கப்பூரில் உள்ள ஒரு Driving School க்கு Appointment ஒன்றை எடுத்துவிட்டு சென்று அங்கே Registration பன்னிவிட்டு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதற்காக SGD $12 முதல் SGD $15 வரை கட்டணம் அறவிடப்படும். கட்டணத்தை ATM அட்டை வழியாகவே செலுத்த நேரிடும்.

அத்துடன் செல்லும் போது கட்டாயம் இந்திய Licence, Work Permit என்பவற்றைக் கொண்டுசெல்ல வேண்டும். 

பின்னர், Practical போட்டுவிட்டு Exam க்கு படித்து Exam எழுத வேண்டும். Exam இல் Pass ஆகிய பின்னர் Paper ஒன்று தரப்படும். 

அந்த Paperயை எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் போலிஸ் தலைமை அலுவலகம் செல்ல வேண்டும். கூடவே Passport, Document என்பவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

அவர்கள் எல்லா Document, Passport என்பவற்றை Verify செய்துவிட்டு Document Paper ஒன்று கொடுப்பார்கள். அதை எடுத்துக்கொண்டு சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வரவேண்டும்.

அங்கே உங்களுடைய முகவரி, எங்கே Licence எடுத்தீர்கள் போன்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சிறிது நாட்களின் பின்னராக உங்களது முகவரியிற்கு கடிதம் ஒன்று அனுப்புவார்கள்.

கடிதத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் சிங்கப்பூர் பொலிஸ் தலைமைக்காரியாலயம் செல்ல வேண்டும். போகும் போது Passport அளவு புகைப்படம் கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் உங்களுடைய தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உங்களுக்கான Class 3c சிங்கப்பூர் Licence உங்களது முகவரியிற்கு அனுப்பப்படும். 

Class 3c Licenceயை பயன்படுத்தி கார், சிறிய வேன், சிறிய ரக பஸ் போன்றவற்றை சிங்கப்பூரில் ஓட்ட முடியும். Class 3c ஐ வைத்துக்கொண்டு பெரிய ரக வாகனங்களை ஓட்ட முடியாது.

பெரிய வாகனங்கள், கம்பனி வாகனங்களை ஓட்ட வேண்டும் எனின் அதற்கு Class 3 Licence உங்களுக்கு தேவைப்படும்.

PSA க்கு உள்ளாகவே Driving வேலையாக இருந்தால் இந்திய Driving Licenceயை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்ட முடியும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments