Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்சுகாதார அறிவியல் ஆணையத்தால் (HSA) பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளை திருடச் சென்றவர்கள் பிடிபட்டனர்

சுகாதார அறிவியல் ஆணையத்தால் (HSA) பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளை திருடச் சென்றவர்கள் பிடிபட்டனர்

சிங்கப்பூரின் வூட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து சுகாதார அறிவியல் ஆணையத்தால் (HSA) பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சிகரெட்டுகள் (e-vaporizers) மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களைத் திருட முயன்றதாக மூன்று நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எல்வின் சூரியகந்தன் (வயது 22), சீ வாய் யுவான் (வயது 35), லிம் ஷி வேய் (வயது 38) ஆகியோர் மார்ச் 28 ஆம் தேதி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டு முயற்சி குறித்து போலீசார் மற்றும் HSA மார்ச் 27 அன்று கூட்டறிக்கை வெளியிட்டனர். மார்ச் 23 அன்று கிடங்கில் புகுந்து திருட சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் அந்நபர்கள் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

கிடங்கைச் சுற்றி இவர்கள் நடமாடுவதை கவனித்த HSA அதிகாரிகள், அவர்களைக் கைது செய்தனர். அவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்கள்.

இந்த மூன்று பேர் மீதான வழக்குகளும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. களவாடியதற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments