2024 இல் PSA வேலை எப்படி இருக்கு அதில் எவ்வளவு சம்பளம், என்னென்ன மாதிரியான வேலைகள் உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதலில், PSA என்பது Port of Singapore Authority ஆகும். PSA என்று சொல்லும் போது கப்பல் மற்றும் துறைமுகம் போன்ற இடங்களில் உங்களுக்கான வேலைகள் காணப்படும்.
சிங்கப்பூர் வந்து வேலை செய்வதற்கென பல்வேறு பாஸ்கள் உள்ளன. உதாரணமாக பரவலாக பயன்படுத்தப்படும் பாஸ்கள் என பார்க்கப்போனால் S Pass, Work Permit, Employment Pass என பல்வேறு பாஸ்கள் சம்பள மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், PSA என்பது ஒருவகையான பாஸ் ஆகும்.
நீங்கள் சிங்கப்பூர் சென்று டிரைவர் ஆக வேண்டும் என்று சொன்னால் அதற்கு நீங்கள் Driving Licence எடுக்க வேண்டும்.
Licence எடுப்பதென்றால் கூட ஒன்று முதல் இரண்டு லட்சங்கள் வரை உங்களுக்கு செலவாகலாம்.
ஆனால், நீங்கள் உங்களது நாட்டில் ஏற்கனவே டிரைவர் ஆக இருந்தால், ஏற்கனவே பெரிய வாகனங்கள் ஓட்டிய அனுபவம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் PSA இல் நேரடியாக டிரைவர் ஆகவே உங்களால் போக முடியும்.
PSA இல் என்னன்ன வேலைகள் உள்ளதென பார்த்தால் குறிப்பாக டிரைவர் வேலை, லேஷிங் வேலை, கப்பல் சம்பந்தமான இன்னும் பல்வேறு வேலைகள் உள்ளன.
இதில் முக்கியமான வேலைகள் PSA டிரைவிங் வேலை, PSA லேஷிங் வேலை என்பனவாகும்.
PSA லேஷிங் வோர்க் என்பது கப்பலில் நிறைய கண்டைனர்ஸ் (Container) ஏற்றும் போது அதனை விழுகாதவாறு கம்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி டைட் பன்னுவது, அதே போன்று கண்டைனர்ஸ் இறக்கும் போது லேஷிங் ஐத் தளர்த்தி கண்டைனர்ஸை இறக்குவது தொடர்பான வேலை ஆகும்.
சிங்கப்பூர் PSA இல் நிறைய வேலைகள் இருந்தாலும் இந்த லேஷிங் வோர்க் மற்றும் டிரைவிங் வோர்க்குத்தான் அதிகமான் ஆட்கள் எடுப்பார்கள்.
சம்பளம் பற்றி பார்க்கும் போது உங்களுக்கு நல்ல சம்பளமே கிடைக்கப்பெறும், மாதம் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் வரை உங்களது வீட்டுக்கு அனுப்பக்கூடியவாறு இருக்கும்.
PSA வேலையில் ஓவர்டைம் அதிகமாகவே இருக்கும். ஓவர்டைம் செய்து அதிகமாகவும் சம்பாதிக்கவும் முடியும்.
PSA ஜாப்ஸ் ஒவ்வொரு வருடமும் வருகிறது என சொன்னால் நேரடியாக தமிழ் நாட்டில் இருந்து ஆட்கள் எடுத்துக்கொண்டு செல்வார்கள். அத்துடன், நீங்கள் வேலைக்குச் செல்லும் முதல் உங்களது வேலைக்கு ஏற்ற டிரைனிங் கொடுத்துவிடுவார்கள்.
இதற்கு நீங்கள் அட்வான்ஸ் கொடுத்து டிரைனிங்ல கலந்து கொள்ளுகின்ற மாதிரி இருக்கும்.
இதில் எப்படி என்றால் ஒரு ஆயிரம் பேருக்கு டிரைனிங் கொடுத்தால் அதில் திறமையான ஒரு 300/ 400 பேரை வேலைக்கு எடுப்பார்கள். மீதமுள்ளவர்கள் அடுத்தமுறை வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது முயற்சிக்கலாம்.
இதில் ஏஜண்டைப் பொருத்து, உங்களது அட்வான்ஸை உங்களுக்கு திரும்ப கொடுக்கின்றவர்களும் இருக்கிறார்கள் அதே போன்று டிரைனிங்க்கே அட்வான்ஸ் சரியாக போய்விட்டது என்று கூறுபவர்களும் உள்ளார்கள்.
PSA ஜாப்ஸ் என சொல்லும் போது வேலைகள் கடினமாக அமையும். இது தான் முக்கியமாக கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.
இந்த வேலைகளுக்காக உங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு போனால் உங்களால் நன்றாக வேலை செய்ய முடியும்.
சில சமயம், PSA ஜாப்ஸ் கடினமாக உள்ளது வேறு வேலைகளுக்கு முயற்சி செய்யப்போகிறீர்கள் என்றால் கூட முயற்சிக்கலாம்.
அத்துடன், 2024 இல் இன்னும் PSA இற்கு ஆட்கள் தெரிவு செய்யவில்லை. ஆட்கள் எடுக்கும் தேதி வரும் போது உங்களுக்கு நாம் தெரிவிப்போம்.
- யாரெல்லாம் சிங்கப்பூரில் Dependent Pass (DP) எடுக்கலாம்? வேலை வாய்ப்புகள் DPயில் இருந்தால் எப்படி இருக்கும்?
- சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? முதலில் ஏஜென்சி நம்பகமானது தானா என்று தெரியணுமா?
- இந்தியாவில் டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் வந்த பிறகு டெஸ்ட் அடித்து வேலைக்கு சேரனுமா?வழிமுறை இதோ!
- சிங்கப்பூருக்கு வெறும் இரண்டு வாரத்தில் வேலைக்கு வர உதவும் TEP Pass
- சிங்கப்பூரில் வேலைக்கு வர ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைக்கொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்கள் கைக்கு