சிங்கப்பூர் செல்லும் போது ஒவ்வொரு Pass, Permit க்கு என Documents வேறுபடும். அதில் ஒரு Document ஆயினும் கொண்டுசெல்ல தவற விடப்படும் போது நீங்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட அதிக வாய்ப்பு உண்டு.
அதோடு முக்கியமான விடயம் என்னவென்றால் உங்களது Documents இல் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்களது விவரம் அனைத்தும் சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சில சமயங்களில் உங்களது Passport, Visa வில் உள்ள உங்களது பெயர் சரியானதாக இருக்கிறதா என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், சில சமயங்களில் Visa வரும் போது சில எழுத்துப்பிழைகள் காரணமாக உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியாமல் போகும்.
அத்துடன் சிங்கப்பூர் புதிதாக செல்கிறீர்கள் எனின் Onboard Slot, Room Registration Certificate போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
சில Documents குறையும் பட்சத்தில் Airport இல் வைத்தே உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். அதே போன்று ஏனைய Documents இலும் உங்களது விவரம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.
இப்போது என்னென்ன Pass, Permit க்கு என்னென்ன Documents வேண்டும் என பார்ப்போம்.
EPass, SPass, NTS Permit போன்றவற்றிற்கு RMI Certificate (Risk Management Intelligence) எடுத்துக்கொள்வது சிறந்தது.
EPass க்கான Documents ஐப் பார்க்கும்போது Visa, Passport, Vaccine Certificate, SG Arrival Card, Ticket மற்றும் Room Registration Certificate போன்றவற்றைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Vaccine Certificate ஐப் பார்க்கும் போது அது Fully Vaccinated ஆக இருக்க வேண்டும். அத்துடன் Vaccine Certificate இல் உங்களது Passport Number இருக்க வேண்டும்.
அதே போன்று SPass க்கும் மேற்குறிப்பிட்ட EPass க்கு தேவைப்படும் Documents தான் தேவைப்படுகிறது.
NTS Permit இல் செல்பவர்கள் Visa, Passport, RMI Certificate (இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டும்), Vaccine Certificate, Bond Paper, Room Registration Certificate மற்றும் SG Arrival Card போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tourist Visa இல் செல்பவர்கள் Visa, SG Arrival Card போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், Work Permit, PCM Permit மற்றும் Shipyard Permit போன்றவற்றுக்கான Documents களாக IP, Visa, Passport, Ticket, Vaccine Certificate, Bond Paper, Room Registration Certificate, Onboard Slot என்பவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
உங்களுக்கு IP வந்த பின்னர் Room Registration பன்ன வேண்டும். Room Registration Certificate வந்த பின்னர் Onboard Slot Register பன்னுவது சிறந்தது.
Student Pass இல் செல்லுபவர்கள் Visa, Passport, Vaccine Certificate, Room Registration Certificate மற்றும் SG Arrival Card போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட Pass, Permit க்கான Documents களை தவறாமல் எடுத்துச் செல்லும் போது நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் என்ற அச்சம் இல்லாமல் சிங்கப்பூர் செல்ல முடியும்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? முதலில் ஏஜென்சி நம்பகமானது தானா என்று தெரியணுமா?
- சிங்கப்பூர் வேலைக்கு Skill Test அடிக்காமல் நல்ல சம்பளத்துடன் வர வேண்டுமா? PSA தான் இதற்கான பெஸ்ட் சாய்ஸ்
- இந்தியாவில் டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் வந்த பிறகு டெஸ்ட் அடித்து வேலைக்கு சேரனுமா?வழிமுறை இதோ!
- சிங்கப்பூருக்கு வெறும் இரண்டு வாரத்தில் வேலைக்கு வர உதவும் TEP Pass
- சிங்கப்பூரில் வேலைக்கு வர ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைக்கொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்கள் கைக்கு