Friday, November 8, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூருக்கு Skill Test அடித்து மற்றும் அடிக்காமல் செல்வது! என்ன நன்மைகள்? இப்போது எது சிறந்தது

சிங்கப்பூருக்கு Skill Test அடித்து மற்றும் அடிக்காமல் செல்வது! என்ன நன்மைகள்? இப்போது எது சிறந்தது

சிங்கப்பூரில் நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை தான். 

நாம் என்ன Pass, Permit இல் சிங்கப்பூர் போகிறோம், நம்முடைய வேலை என்ன, அனுபவம் என்ன என்பதைப் பொருத்து தான் நம்முடைய சம்பளம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் செல்லும் போது Skill Test அடித்து செல்வது சிறந்ததா அல்லது அடிக்காமல் செல்வது சிறந்ததா என்ற கேள்வி நம்முள் அதிகமானோருக்கு உண்டு. 

Skill Test அடித்து செல்லுதல் மற்றும் அடிக்காமல் செல்லுதல் என இரண்டுக்கு இடையிலும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம். 

Skill Test அடித்து செல்லும் போது அதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. என்னவென்றால், Skill Test அடிக்காமல் செல்வதைப் பார்க்க அதிக சம்பளம், அடுத்தடுத்த படிகளுக்கு முன்னேறுதல், நாடு சென்று திரும்பும் போது குறைவான கட்டணம் செலுத்துதல் போன்ற காரணிகளைக் குறிப்பிட முடியும்.

அத்தோடு, Skill க்கு ஏற்ற கம்பனிகளும் விரைவாக போட்டுக் கொடுக்கப்ப்டும். 

Skill Test அடித்து போவதில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால் Main Test ஏறுவதற்கு உள்ள அந்த காலப்பகுதி தான். அத்தோடு Test அடித்து அதற்கான ரிசல்ட் வருவதற்கான காலப்பகுதியையும் சொல்ல முடியும்.

Skill Test அடித்து செல்லும் போது உங்களுக்கு Work Permit இல் செல்லக்கூடியவாறு இருக்கும்.

Skill Test அடிக்காமல் செல்ல வேண்டுமேயானால் அப்படியும் சிங்கப்பூர் செல்லலாம்.

Test அடித்து செல்வதைப் பார்க்க அடிக்காமல் செல்லும் போது விரைவாக சிங்கப்பூர் சென்றுவிட முடியும்.

அத்தோடு Test அடிக்காமல் செல்லும் போது ஆரம்ப செலவும் குறைவாகத்தான் இருக்கும்.

Skill Test அடித்து செல்லும் போது நீங்கள் சற்று அதிகளவு பணம் செலுத்த வேண்டிருக்கும். அது 5 லட்சங்கள் வரைக்கூட ஆகலாம்.

Test அடிக்காமல் SPass, EPass, PCM போன்ற எந்த Permit ஊடாகவும் நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம்.

என்னவொன்று, மீண்டும் நாடு சென்று மீண்டும் சிங்கப்பூர் செல்லும் போது கொஞ்சம் அதிகம் பணம் செலுத்த வேண்டி வரும்.

அத்துடன், சிங்கப்பூருக்கு வேறு பாஸ்களில் வந்து சிங்கப்பூரில் Test அடித்து மாறுவதென்றால் கூட மாறலாம்.

எல்லாம் உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாருதான். இரண்டிலும் இருக்கும் நன்மைகள், குறைபாடுகள் என்பவற்றை ஆராய்ந்து பொருத்தமான முடிவு எடுத்து சிங்கப்பூர் வருவது சிறந்தது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments