சிங்கப்பூரில் வேலைக்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வழிகளில் வருகிறனர். அதில் முக்கியமான வழிதான் Test அடித்து வருவதாகும்.
சில வருடங்களுக்கு முன்னர் அதிகமானவர்கள் Skill Test அடித்தே சிங்கப்பூருக்கு வேலைக்கு வருகை தந்தனர்.
காரணம் என்னவென்றால், Test அடித்து வருபவர்களுக்கு சிங்கப்பூரில் சம்பளமானது அதிகமாகவே கிடைத்தது.
ஆனால், கொரோனா தொற்றுக்குப் பின்னரான காலப்பகுதிகளில் Skill Test அடித்து வருபவர்களின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி காணப்படுகிறது.
ஏனெனில், Skill Test அடிக்கும் Institute களுக்கு கிடைக்கப்பெறும் Quota வின் அளவு ஆகும்.
முன்னர், ஏராளமானோர் Skill Test அடித்துவிட்டு சிங்கப்பூருக்கு வந்து விடுவார்கள். ஆனால், தற்போது Quotaவின் குறைப்பின் காரணமாக அதிகமானோர் Test அடிக்க முடியாமல் உள்ளது.
மேலும், Instituteகளில் Skill Test அடிக்க செல்லும் போது Main Test ஏறுவதற்கான காலமும் இப்போது அதிகமாகவே காணப்படுகிறது.
இக் காலப்பகுதியானது 10 தொடக்கம் 15 மாதங்கள் வரைக்கூட ஆகலாம். Main Test ஏறுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதிகமாக காத்திருக்க நேரிடுகிறது.
Main Test ஏறுவதற்கான காலம் அதிகமாக உள்ளதினாலும், Quota குறைவினாலும் தற்போது அதிகமானோர் ஏனைய Pass, Permitகளினூடாகவே சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முயற்சிக்கின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் மிகவும் குறைவான Instituteகளே செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. பெரும்பாலான Institute மூடியே காணப்படுகிறன.
நிறைய Instituteகள் Open ஆகப்போகின்றன எனும் தகவல் தற்போது வந்திருக்கிறது. அதிலும், சில நம்பத்தகுந்த Skill Test Instituteகளை கீழே குறிப்பிடுகிறோம்.
Instituteகளை தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரியுடன் குறிப்பிட்டிருக்கிறோம். எனவே, தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி அல்லது நேரடியாகவே சென்று மேலதிக தகவல்களை விசாரிக்க முடியும்.
Institute | Address |
SV Training Center | No.28,Selliamman Koil street, Medavakkam-Mambakkam Road, Ponmar, Chennai-600127 +91 44 6133 3138 |
Hytech Goodwill Training & Testing Centre | 2/392A, Mambakkam Road, Medavakkam, Chennai 600 100 +91 44 2277 0886 |
RK Singapore (BCA) Skilled Training & Testing Centre | No.2/171, East Coast Road, Pandiyan Salai, Neelankarai Opposite CSB Bank, Chennai 600115 +91 94 4393 3396 |
ASTRO Training Service | Plot No: 5/6 Selvam Nagar, Ponniyamman medu, 200 Feet Inner ring road, Near Retteri Junction, Chennai 600 110. +91 98 4006 3135 |
மேலும், Quota வரம்பானது அதிகரிக்கும் எனும் ஊர்ஜிதப்படுத்தப் படாத தகவல் ஒன்று வெளியாகிருக்கிறது. முன்னர் போல் Quota அதிகமாக இருந்தால், விரைவாகவ Test அடித்துவிட்டு சிங்கப்பூர் செல்ல முடியும்.
சிலர் சிங்கப்பூர் சென்று Test அடிக்கிறனர். சிங்கப்பூரில் Skill Test அடிப்பது தமிழ்நாட்டைப் பார்க்க செலவு குறைவு. மேலும், அதிகமான காலப்பகுதி காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. விரைவாகவே Test அடித்துவிட முடியும்.
ஆனால், சிங்கப்பூரில் Test அடிக்க வேண்டும் எனில் அதற்கு Company Letter உங்களிடம் கேட்கப்படும். Company Letter இருந்தால் சிங்கப்பூரில் இலகுவாக Test அடிக்க முடியும்.
Company Letter இல்லாமல் சிங்கப்பூர் சென்று Skill Test அடிப்பது என்பது தற்போது கடினமாகவே உள்ளது.
Skill Test அடித்து வருவதற்கு மாற்றமாக் சிங்கப்பூர் அரசினால் சில புதுவகையான Permitகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Skill Test அடித்துவர கடினமாக உள்ளவர்கள் அந்த Permitகளினூடாக சிங்கப்பூருக்கு வர முடியும். ஆனால், Skill Test அடித்து வந்து பெறும் சம்பளத்தைப் பார்க்க சற்று குறைவுதான்.
எனவே, வேலைக்கு என்ன சம்பளம் என்பதை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சிங்கப்பூர் வருவது சிறந்தது.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூருக்கு மே மாதத்தில் செல்லும் போது Pass, Permit களுக்கு என கொண்டுசெல்ல வேண்டிய முக்கியமான டாக்குமெண்ட்ஸ் என்னென்ன?
- சிங்கப்பூரில் S Pass Process எப்படி நடக்கிறது? வேலைக்கு எப்படி ஆட்கள் எடுக்கிறார்கள்? S Passயில் எப்படி போவது!
- NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? தற்போது S Passயில் யாருக்கு, என்னன்னெ வேலைகள் உள்ளன!
- சிங்கப்பூரில் Electrical, Excavator Operator வேலைகள் எப்படி இருக்கிறது? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
- Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்!!