Saturday, October 5, 2024
Homeசிங்கப்பூர்NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? தற்போது S Passயில் யாருக்கு, என்னன்னெ...

NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? தற்போது S Passயில் யாருக்கு, என்னன்னெ வேலைகள் உள்ளன!

சிங்கப்பூரில் வேலைக்கு அதிகமானோர் S Passயிலேயே வர விரும்புகின்றனர். காரணம் ஏனைய Passகளை பார்க்க S Passயில் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதே ஆகும்.

சிங்கப்பூரில் வெவ்வேறு Passகளில் வேலை செய்வோர் S Passக்கு மாறிக்கொள்ள முடியும். 

ஆனால், அதற்கு என சில விதிமுறைகளும் வரையறைகளும் உள்ளன. இந்த பதிவில், NTS Permitயில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் எப்படி S Passக்கு மாறுவது என்பதைப் பார்ப்போம்.

S Passக்கு சிங்கப்பூர் அரசு வரையறை செய்த சம்பளம் மாதத்திற்கு SGD $3,500 வரையாகும். ஆனால், S Passயில் இருக்கும் எல்லோருக்கும் SGD $3,500 என்பது கிடைக்கப்பெறுவது இல்லை.

காரணம், உயர் சம்பளமானது வேலை, அனுபவம் என்பனவற்றில் தங்கியுள்ளது. நல்ல அனுபவம் உள்ளவர்கள் அதிகபட்ச சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும்.

NTS Permitயில் இருந்து S Passக்கு மாறுவதற்கு என சில விதிமுறைகள் உள்ளன.

NTS Permit ஆனது பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கானது. 

எனவே, S Passக்கு விண்ணப்பிக்கும் ஊழியர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்பவராக இருக்க வேண்டும்.

நல்ல கல்வித்தகுதி (Degree, MSc) போன்றவையும் நிலையான மாத வருமானமும் சிங்கப்பூரில் இருக்க வேண்டும். 

NTS Permitக்கு விண்ணப்பிப்பவராயின் S Pass Self Assessment Toolயைப்  பயன்படுத்தி உங்களது தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், உங்கள் சார்பாக உங்களது முதலாளியும் S Passக்கு விண்ணப்பிக்க முடியும். 

முக்கியமான விடயம் என்னவென்றால், S Pass கிடைக்கும் வரை உங்களது NTS Permit செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். 

அத்துடன், S Pass விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, S Pass வழங்கப்படும் முன்னதாக NTS Permitயை முதலாளி ரத்து செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

NTS Permit ஆனது காலாவதி ஆகப்போகிறது எனின், முதலாளியிடம் இது தொடர்பாக அறிவித்து NTS Permitயின் காலாவதி தேதியை நீட்டிக்கொள்ளும்படி கூற வேண்டும்.

தற்போது பெறும்பாலான S Pass வேலைகள் தகவல் தொழிநுட்ப துறை, கட்டுமானத்துறை போன்றவற்றில் அதிகமாக காணப்படுகிறன. 

வெளிநாட்டு ஊழியர்களுக்கான S Pass Quota ஆனது முன்பை விட சற்று குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments