சிங்கப்பூருக்கு பல்வேறு வேலைக்காக பல்வேறு நாடுகளில் இருந்து வருவார்கள். அதிலும் குறிப்பாக Electrical, Excavator Operator வேலைகளுக்கு அதிகமாகவே வருவார்கள்.
சிங்கப்பூரில் Electrical வேலை எப்படி இருக்கிறது, எவ்வாறு செல்வது, சம்பளம் எவ்வளவு கிடைக்கும் போன்ற விடயங்களைப் பார்ப்போம்.
Electrical வேலைக்கு Degree படித்திருந்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி, சிங்கப்பூருக்கு செல்ல முடியும்.
Degree படித்தவர்கள் S Passயினூடாக சிங்கப்பூர் செல்ல முடியும். பெரும்பாலும் S Pass ஊடாக செல்லுபவர்கள் Agentக்கு பணம் கொடுத்தே செல்கிறார்கள்.
S Passயில் சம்பளமானது அதிகமாக கிடைக்கும். அதேபோன்று Agentக்கு பணம் செலுத்தும் போது மிகவும் அவதானமாகவும் செயற்பட வேண்டும்.
மேலும், Skilled Test அடித்தும் Electrical வேலைக்கு சிங்கப்பூர் செல்ல முடியும். S Passயை விட சம்பளம் குறைவுதான். ஆனால், இங்கு Agent மூலமாக ஏமாற்றம் அடைவது இருக்காது.
Electrical வேலையில் கீழ் குறிப்பிட்ட வேலைகள் சிங்கப்பூரில் உள்ளன. இந்த வேலைகள் எல்லாம் தெரிந்தால் சிங்கப்பூரில் நல்ல சம்பளம் வாங்க முடியும்.
Electrical Wiring, Single Phase, Three Phase, GI Conduit Pipe Installation, Metal Draining, PVC Casing, DB Box Installation, DB Box Termination, Single Line Diagram, Maintenance Troubleshooting, Cable Tray Installation, Wire Pulling போன்ற வேலைகள் தெரிந்தால் நல்ல சம்பளம் வாங்க முடியும்.
Electrical வேலைக்கு அடிப்படை சம்பளமாக SGD $18 முதல் SGD $20 வரை கிடைக்கும். Electrical துறையில் நல்ல அனுபவம் உள்ளவர் எனின் ஒரு நாளைக்கு SGD $35 முதல் SGD $40 வரையில் கிடைக்கப்பெறும்.
இதிலே, Single Line Diagram தெரிந்தால் S Passயிலேயே சிங்கப்பூர் வரமுடியும். ஏனெனில், Electricalயில் மிக முக்கியமான ஒன்றாகும்.
Construction, Building Maintenance போன்ற Courses Electrical துறைக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும்.
Building Maintenanceயிலே Facility Maintenance Course முடித்தால் சிங்கப்பூரில் S Passயிற்கு மாற முடியும். அதே போன்று Constructionயில் Coretrade, Diploma போன்றவை பன்ன முடியும்.
இந்த Courses படிக்கும் போது உங்களுடைய சம்பளமானது அதிகரிக்கும்.
அடுத்ததாக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான வேலைதான் Hydraulic Excavator Operator. இந்த வேலைக்கு என பிரத்தியோகமான Courses உள்ளன.
BCA, Founda போன்ற இடங்களில் Excavator Operatorக்கான Courses படிக்க முடியும். இதற்காக SGD $2200 முதல் SGD $2700 வரை செலவாகும். அத்துடம் PUB Course உம் முடிக்க வேண்டும்.
வேலை அல்லாத நாட்களில் கூட படிக்க முடியும். அதாவது Sunday இல் படிக்க முடியும். ஒவ்வொரு வாரமும் Sundayயில் படிக்கிறீர்கள் எனின், 9 வாரத்தினுள் இந்த Course படித்து முடிக்க முடியும்.
Excavator Operatorக்கான ஆரம்ப சம்பளமாக நாள் ஒன்றிற்கு SGD $30 வழங்கப்படும். Overtime அதிகமாக காணப்படும். Excavator Operatorக்கான வேலைகள் இரவு நேரங்களில் அதிகமாக நடைபெறும். Overtime க்கு SGD $5 முதல் SGD $6 வரை வழங்கப்படும்.
மேலும், அனுபவம் உள்ளவர் எனின் நாள் ஒன்றிற்கான சம்பளமாக SGD $45 வரை பெற முடியும்.
Excavator Operatorயிலும் பல்வேறு துறைகள் உள்ளன. எனவே, உங்களுடைய துறை எதுவோ அதை தெரிவு செய்து அதில் Courses செய்து Excavator Operator ஆகலாம்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் Overtime வேலைக்கு எவ்வளவு தருகிறார்கள்? எப்படி கணக்கிடப்படுகிறது? எவ்வளவு கொடுக்க வேண்டும்!
- சிங்கப்பூரில் S Pass Process எப்படி நடக்கிறது? வேலைக்கு எப்படி ஆட்கள் எடுக்கிறார்கள்? S Passயில் எப்படி போவது!
- சிங்கப்பூரில் தற்போது Safety Supervisor வேலை, Course எப்படி இருக்கு? எவ்வளவு செலவாகும்? சம்பளம் எவ்வளவு?
- இந்திய Driving Licenceயை வைத்து சிங்கப்பூர் Licenceயை எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?
- சிங்கப்பூரில் Shipyard, PCM இலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!