சிங்கப்பூர் வேலை என சொல்லும் போது அதைப் பெறுவது இப்போதெல்லாம் கடினமாக மாறி வருகிறது.
ஆனால், நம்மிடம் கையில் பணம் இருந்தால் அதை ஏஜெண்டிடம் கொடுத்து எப்படியாவது சிங்கப்பூர் வந்துவிட வேண்டும் என நம்மில் அதிகமானோர் நினைப்பார்கள்.
அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது, என்னவென்றால் ஆரம்பத்தொகையாக செலுத்த வேண்டிய பணம் அதிகமாக இருக்கும் போது, நாம் சிங்கப்பூர் சென்று சம்பாதிக்கும் பணமும் ஏஜண்ட்க்கு கொடுக்கும் பணமும் சரி சமமாக இருந்தால் என்ன செய்வதென்ற அச்சம் அதிகமானோருக்குள் காணப்படுகிறது.
இங்கே ஏஜண்ட்க்கு கொடுக்கும் இந்த பணம் இல்லாமல் போனால் சிறப்பாக இருக்கும் தானே!
அந்தவகையில், இங்கே ஏஜெண்டே இல்லாமல் எப்படி சிங்கப்பூர் வேலைக்கு டிரை பன்னுவது எப்படி என்று பற்றி பார்ப்போம்.
குறிப்பாக, வேலை தேடுபவர்களுக்கு லிங்க்ட்இன் முதன்மையான தளமாக மாறிவருகிறது. அது ஏன் தெரியுமா?
லிங்க்டின் உம் ஒரு சமூக வலைத்தளம் தான்! ஆனால் அதில் விளையாட்டும் பொழுதுபோக்கும் நோக்கமல்ல, மாறாக அங்கு அறிவை பகிர்வது, வேலைவாய்ப்புகள் சம்மந்தமான விடயங்களைப் பற்றி பகிர்வது, அறிவியல், தொழில்நுட்பம் இவற்றைப் பற்றி பேசுவதுதான் முக்கியம்.
தொடக்கநிறுவனங்கள் (startups) முதல் பெருநிறுவனங்கள் வரை, முக்கிய நபர்கள் இருக்கும் இடம் என்னவென்றால் அது LinkedIn தான்.
நீங்கள், லிங்க்ட்இன்னை சிறப்பாக பயன்படுத்த உங்கள் சுயவிவரத்தை (Updated resume) பதிவேற்றம் செய்து, Open என்ற நிலையை தேர்ந்தெடுங்கள்.
இதன் மூலமாக உங்களுக்கு சில நேர்காணல் அழைப்புகள் கிடைக்கப்பெறலாம். LinkedIn இன் சிறப்பு என்னவென்றால், இங்கே இடைத்தரகர்கள் கிடையாது. மாற்றமாக, நிறுவனங்களே நேரடியாக உங்களை தொடர்பு கொள்ளும்.
சிங்கப்பூரில் லிங்க்ட்இன் மூலமாக வேலை தேட விருப்பம் எனின், கீழுள்ள படிமுறையைப் பின்பற்றுங்கள்:
LinkedIn என்ற இணையதளத்திற்கு சென்று, உங்களுக்கு கணக்கு இல்லையென்றால், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து புதிதாக கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதில், உங்களது அண்மைய சுயவிவரத்தை பதிவேற்றுங்கள். பிறகு, Jobs என்ற பகுதிக்கு செல்லுங்கள். அதில், தேடல் பட்டியில் Singapore என தட்டச்சு செய்து, தோன்றும் பட்டியலில் இருந்து Jobs என்பதை தேர்வுசெய்யவும்.
வேலைவகை, தொழில்துறை, அனுபவம் போன்றவற்றைப் பொருத்து வேலையைத் தேட Filter என்ற தேர்வை பயன்படுத்துங்கள். வேலைவாய்ப்பு பட்டியலை முற்றிலும் படித்து, அதில் கம்பனிகள் கூறியுள்ள குறிப்புகள் மற்றும் தேவைகளை படியுங்கள்.
உங்களுக்கு விருப்பமான வேலை ஏதேனும் காணப்படின் அதன் Apply பொத்தானை அழுத்தி நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.
அதே வேலைக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதையும் பார்க்கலாம். விண்ணப்பித்த பின் உங்களின் சுயவிவரம் படிக்கும் கம்பனியின் தேவைக்கு உங்களுடைய Resume ஒத்துப்போனால், அவர்கள் நேர்காணலுக்காக உங்களை தொடர்புகொள்வார்கள்.
முக்கிய விடயம் என்னவென்றால், உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிட வேண்டாம். ஏனெனில், அப்ளை செய்துவிட்டு, ஒரு இண்டர்வீவ் கோல் ஒன்றும் வரவில்லை என தளர்ந்து விட வேண்டாம்.
தினமும் LinkedIn ஐப் பாருங்கள், மேற்கூறப்பட்ட படிமுறைகளைப் பின்பற்றி வேலையைத் தேடுங்கள். தினமும் புதிய புதிய வேலைகள் அதில் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். பொருத்தமான எல்லா வேலைக்கும் அப்ளை செய்யுங்கள்.
LinkedIn இல் ஒரு சிறப்பான பகுதி உள்ளது, அது தான் LinkedIn Premium ஆகும். இது என்னவென்றால் இலவசமாக LinkedIn ஐப் பயன்படுத்துவதைப் பார்க்க LinkedIn Premium இல் அதிகளவான வேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்கள், உங்களுடைய கணக்கை அதிகமானோருக்கு தெரியப்படுத்தும் அம்சம் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது!
எனவே, வேலை தேடுகிறீர்கள் எனின், LinkedIn Premium ஐப் பயன்படுத்துங்கள். ஏனெனில், இலவசமாக பயன்படுத்துவதைப் பார்க்க அதிக வேலை வாய்ப்புக்களை இது காட்டும்.
LinkedIn இன் Premium ஆனது உங்களது முழு விவரத்தையும் வைத்துக்கொண்டு உங்களது விபரம் பொருந்தும் கம்பனி வேலைகளை உங்களுக்கு காண்பிக்கும்.
உதாரணமாக, சிங்கப்பூரில் Civil Engineer ஆக செல்ல முயற்சிக்கிறீர்கள் எனின், என்னென்ன Civil Engineering உடன் தொடர்பாக வேலைகள் வருகிறதோ அவை அனைத்தையும் உடனே காட்டிவிடும். LinkedIn இலவசமாக பயன்படுத்தும் போது குறிப்பிட்ட அளவான வேலைகளையே காட்டும். ஆனால், Premium இல் எல்லா வேலைகளையும் உடனடியாகவே காட்டிவிடும்.
மேலும், Civil Engineering தொடர்பான புதிய வேலைகள் கம்பனிகளால் பதிவிடும் போது அது உங்களுக்கு உடனே கிடைக்க வேண்டும் எனின், LinkedIn இல் அந்த வேலை வரும் போது அது தொடர்பாக Email கிடைக்கும் படி செய்து கொள்ளலாம்.
புதிய வேலைகள் வரும் போது உடனடியாக Apply செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு LinkedIn Premium ஆனது இலவசமாக கிடைக்கும். எனவே, இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்தி தேடுங்கள்.
LinkedIn மூலம் சிங்கப்பூர் வந்தவர்கள் ஏராளமானோர்கள் உள்ளனர். தொடர்ந்து முயற்சி செய்யும் போது நிச்சயமாக உங்களுக்கு வேலை கிடைக்கும்.
லிங்க்ட்இன் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை தரகர்களுக்கு செலவழிக்காமல் சிங்கப்பூரில் வேலை தேடுவதில் நீங்கள் தனித்து நிற்கலாம்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூருக்கு மே மாதத்தில் செல்லும் போது Pass, Permit களுக்கு என கொண்டுசெல்ல வேண்டிய முக்கியமான டாக்குமெண்ட்ஸ் என்னென்ன?
- சிங்கப்பூரில் S Pass Process எப்படி நடக்கிறது? வேலைக்கு எப்படி ஆட்கள் எடுக்கிறார்கள்? S Passயில் எப்படி போவது!
- NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? தற்போது S Passயில் யாருக்கு, என்னன்னெ வேலைகள் உள்ளன!
- சிங்கப்பூரில் Electrical, Excavator Operator வேலைகள் எப்படி இருக்கிறது? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
- Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்!!