Friday, November 8, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அதிகரிக்கின்றன

சிங்கப்பூரில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அதிகரிக்கின்றன

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சின் (MOM) அறிக்கையின்படி, சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஆண்டு தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கின்றன.

2023 டிசம்பரில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 32.6% நிறுவனங்கள் முதல் மூன்று மாதங்களுக்குள் சம்பளத்தை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 18% அதிகம் ஆகும்.

மேலும், கிட்டத்தட்ட 47% நிறுவனங்கள் இதே காலகட்டத்தில் மேலும் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன.

சம்பள உயர்வு மற்றும் கூடுதல் ஆட்களை வேலைக்கு எடுப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனவும் 2024ல் இன்னும் பொருளாதாரம் வேகமாக வளர உதவும் என MOM கூறுகிறது.

இருப்பினும், உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் சில வேலை குறைப்புகள் நடக்கலாம், ஆனால் அது பொருளாதாரத்தை பெரிதாக பாதிக்காது எனவும் சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அதற்கு, 2023ல் நடந்த வேலை குறைப்புகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இதில், கிட்டத்தட்ட 10,000 சிங்கப்பூர் உள்ளூர் வேலையாட்கள் உள்பட சுமார் 14,590 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடந்த 6,000 முதல் 8,000 வேலை நீக்கங்களை விட இது மிக அதிகம் என கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலை பாதுகாப்பு குறித்து குறிப்பாக கவலைப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது.

இதனால் வயதான தொழிலாளர்கள், குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். இந்த ஊழியர்கள் பெரும்பாலும் மேலாளர், நிர்வாகி அல்லது தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பதவிகளில் இருப்பவர்களாகவும், அதிக சம்பளம் பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் வேலையிழப்பைத் தவிர்க்க, திறன்களை மேம்படுத்தி, சம்பந்தப்பட்ட பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களைப் பொறுத்தவரை, பலர் தங்களது தற்போதைய திறன்களை விட மேலதிக அவசியமான திறன்களை மேம்படுத்திய பின்னர் புதிய வேலைகளளில் அவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

2022ல் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சுமார் 60% பேர் புதிய வேலையில் இணைந்துள்ளனர். இது கொரோன வைரஸ் தொற்று காலத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைவே ஆகும். இருந்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் புதிய வேலையில் இடம்பிடிக்க ஆறு மாதங்கள் அவகாசம் உள்ளது.

வேலையிழந்தவர்களுக்குப் பிறகு புதிய வேலை கிடைக்கும் விகிதம் 65% அதிகரிக்கும் என MOM எதிர்பார்க்கிறது. இது, பெரும்பாலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அதிக சம்பளத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த கணக்கெடுப்பில் 80,000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது, இதுவும் வேலையிழந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கண்டறிய உதவியது.

வேலை குறைப்புகள் முக்கியமாக வர்த்தகம், தொடர்பு மற்றும் தொழிநுட்ப துறைகளை பாதித்துள்ளன. இந்த வேலை குறைப்புகள் நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் மீண்டும் இணைவதற்கு 70% வாய்ப்பு உள்ளது. அதாவது, மேலும் பல வேலை வாய்ப்புகள் வர இருக்கின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு கட்டுமானத் துறை உள்பட 82,000க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்பட்டன.

அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதால், வேலையின்மை விகிதம் நிலையாக இருக்கும் அல்லது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் குறிப்பிட்ட துறைகளில் வேலை தேட உதவும் பல திட்டங்களை MOM தொடங்கியுள்ளது. நாட்டை முன்னேற்றுவதற்கும், மக்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதற்கும் இது உதவும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments