அதிகமானோர் சிங்கப்பூருக்கு வரும் போது லட்சங்கள் செலவு செய்து அடிப்படை சம்பளத்திற்கு வருகிறார்கள்.
அதாவது S Pass, E Pass போன்றவை தவிர்த்து ஏனைய Permit இனூடாக சிங்கப்பூர் வருபவர்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள்.
அவர்கள் 8 முதல் 10 மாதங்கள் சிங்கப்பூரில் வேலை செய்து உழைத்தால் தான் சிங்கப்பூர் வருவதற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியுமாயிருக்கும்.
எனவே அதிகமானவர்களின் விருப்பம் என்னவென்றால், சிங்கப்பூரில் நல்ல சம்பளம் வாங்க வேண்டும் என்பதே ஆகும்.
எனவே, தற்போதைய சம்பளத்தை விட அதிகமாக வாங்குவதுடன் மேலும் மேலும் உங்களது திறமைகை அதிகரித்து உயர்ந்த பதவிக்கு எப்படி போவதென்பதைப் பார்ப்போம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சிறிய சிறிய Course களை படிக்க வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் ஏதும் Operator வேலைக்காக சிங்கப்பூர் வருகிறீர்கள் எனின், அது தொடர்பாக உள்ள சிறிய Course களை முதலில் இனங்கண்டு படியுங்கள்.
கம்பனி வேலை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் அவற்றைப் படிக்க முடியும்.
கம்பனியில் உங்களது Field இல் சம்பளம் அதிகமாக தரப்படும் சில வேலைகள் காணப்படும். எனவே, Course களை படித்து Skills ஐ அதிகரிப்பதன் மூலம் அந்த வேலைகளுக்கு செல்ல முடியும்.
சிங்கப்பூரில் General Worker ஆக வருகிறீர்கள் எனின், என்னென்ன Course செய்து நல்ல சம்பளத்துடனான வேலைக்கு செல்லலாம் என பார்ப்போம்.
Construction துறையை எடுத்தால் அதில் முன்னேறி செல்வதற்கு பல வகையான Courses உள்ளன.
கட்டுமானத்துறையில் Short Courses களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
Scaffold Erector: கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கூம்பு அமைப்புகளை நிறுவுதல், பிரித்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் அடிப்படை அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட இந்த படிப்பு வழங்குகிறது. இந்த படிப்பு பொதுவாக 1.5 நாட்கள் நீடிக்கும், மேலும் SGD$220 செலவாகும்.
Rigging: Lifting Operations தொடர்பான அடிப்படை கற்கையாகும். இந்த படிப்பு பொதுவாக 1 நாள் நீடிக்கும், மேலும் SGD$300 செலவாகும்.
Working at Heights: உயரமான இடங்களில் நின்று வேலை செய்வது தொடர்பான Skill க்காக வடிவமைக்கப்பட்ட Course ஆகும். இந்த படிப்பு 1 நாள் நீடிக்கும், மேலும் SGD$180 செலவாகும்.
கட்டுமானத்துறையில் Short Courses போன்றே Diploma Courses உள்ளன. இவற்றைப் பின்தொடர்வதன் மூலம் குறைந்த சம்பளத்தில் இருந்து அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகளுக்கு செல்ல முடியும்.
கட்டுமானத்துறையில் Diploma Courses களாக பின்வருவனவற்றைத் தொடர முடியும்.
Specialist Diploma in Building Cost Management (SDBCM): இந்த Course படிப்பதன் மூலம் கட்டுமானத்திற்கான Cost Estimating, Tendering, Contract Administration போன்ற Skills ஐ வளர்த்துக்கொள்ள முடியும். இந்த படிப்பு 9 மாதங்கள் நீடிக்கும், மேலும் SGD$7900 செலவாகும்.
Specialist Diploma in Building Information Modelling (SDBIM): இந்த Diploma படிப்பு 9 மாதங்கள் நீடிக்கும், மேலும் SGD$7900 செலவாகும்.
Cleaning & Security, Logistic, Manufacturing என ஒவ்வொரு துறையிலும் ஏகப்பட்ட Courses காணப்படுகிறன. உங்களது துறைக்கு பொருத்தமான Course ஐ சரியாக இணங்கண்டு தெரிவு செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் நீங்கள் சிங்கப்பூருக்கு வரும் போது சம்பளம் குறைவாக இருக்கும். அத்துடன் தற்போதைய காலப்பகுதியில் சிங்கப்பூரில் விலைவாசியானது விண்ணைத்தொடுகிறது.
எனவே ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தாலும் பொருத்திருந்து படிப்படியாக அடித்த படிக்கு முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிகமானோர் ஆரம்பத்தில் குறைவான சம்பளத்திற்கு வந்தவர்களே, எனவே முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தும் முன்னேற வேண்டும்.
மேலும் வாசிக்க
- தற்போது சிங்கப்பூர் செல்ல எந்தெந்த Institute களில் Skill Test அடிப்பது சிறந்தது! பட்டியல் இதோ!
- 2024இல் சிங்கப்பூர் Workersக்கு Medical Test இல் உள்ள புதிய விதிமுறைகள்! Unfit ஆகும் அபாயம்!
- சிங்கப்பூரில் Shipyard, PCM இலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!
- தமிழ்நாட்டில் Skill Test அடிக்க Institute கள் Open இல் உள்ளன! ஆனால் Test அடிக்கலாமா?
- 2024ல் சிங்கப்பூரில் SOC (Safety)யில் வந்த புதிய விதிமுறைகள்! Class, Exam எப்படி? Pass ஆகலாமா?