Saturday, December 7, 2024
Homeசிங்கப்பூர்2024இல் சிங்கப்பூர் Workersக்கு Medical Test இல் உள்ள புதிய விதிமுறைகள்! Unfit ஆகும் அபாயம்!

2024இல் சிங்கப்பூர் Workersக்கு Medical Test இல் உள்ள புதிய விதிமுறைகள்! Unfit ஆகும் அபாயம்!

சிங்கப்பூருக்கு வேலைக்காக முதன்முறையாக வருவதென்றாலும் சரி, அல்லது ஏற்கனவே சிங்கப்பூர் வந்துவிட்டு நாடு சென்று மீண்டும் சிங்கப்பூர் வருவதென்றாலும் சரி, Medical Checkup கட்டாயமாக இருக்கும்.

Medical Checkup இலேயே நம்முடைய உடலில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பதை முழுமையாக தெரிந்திட முடியும்.

Medical Checkup இல் ஒரு பிரச்சனையும் இல்லை எனும் போது வேலைக்கு நேரடியாக சென்றிடலாம்.

ஆனால், Medical Report இல் Unfit என வரும்போது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவோம். அதன் பின் அங்கு சென்று பிரச்சனையை சரிசெய்து மீண்டும் வர வேண்டியிருக்கும்.

கம்பனியில் வேலை செய்யும் போது ஏதேனும் Medical தொடர்பாக பிரச்சனைகள் வரும் போது அந்த செலவை கம்பனி பார்த்துக்கொள்ளும்.

எந்த Pass, Permit இல் வேலைக்கு வந்தாலும் சரிதான், Medical Checkup கட்டாயம் போட்டே ஆக வேண்டும்.

சிங்கப்பூர் வந்து இரண்டு வாரத்தினுள் இந்த Medical Checkup கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்.

Medical Checkup இல் என்னென்ன Check பன்னுவார்கள், எப்படி பன்னுவார்கள் என்பவற்றைப் பார்ப்போம்.

Checkup இல் Urine Test நடைபெறும். அதிலே, Sugar இன் அளவு மற்றும் இன்னும் பல வியாதிகள் தொடர்பாக அறியப்படும்.

அடுத்ததாக Eye Test நடைபெறும். இதிலே, ஒவ்வொரு கண்ணிலும் அதனுடைய பார்வைத்திறனை Check பன்ணுவார்கள். 

குறிப்பாக, Driver ஆக நீங்கள் சிங்கப்பூர் வரும்போது Color Blind Test பன்னுவார்கள். 

வாகனம் ஓட்டும் போது Traffic Light இன் நிறத்தை பிரித்தறிய முடியுமா என்பதனை முதன்மையானதாக பார்க்க இந்த Test எடுக்கப்படும்.

அடுத்ததாக Blood Test எடுக்கப்படும். இதிலே, Sugar இன் அளவு, Hemoglobin இன் அளவு, இன்னும் குறிப்பாக HIV, Tuberculosis (TB), Syphilis, Malaria தொடர்பாக பார்க்கப்படும்.

மேலும், உங்களது Chest பகுதியை Scan எடுத்து பார்ப்பார்கள். பின்னர், Doctor உங்களிடம் Test தொடர்பாக சில கேள்விகளைக் கேட்பார். 

அத்துடன் என்னென்ன தொற்று தடுப்பூசிகள் போட்டிருக்கிறீர்கள் என்பது தொடர்பாகவும் பார்க்கப்படும்.

அத்துடன், Blood Pressure, Cholesterol போன்றவையும் Check பன்னப்படும். குறிப்பிட்ட அளவை விட கூடும் போது Medical இல் Unfit ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படும்.

Medical Result ஆனது சில நாட்களிலேயே உங்களிக்கும் கம்பனி முதலாளிகளுக்கும் Medical Center இனால் கொடுக்கப்படும்.

Medical இல் Unfit ஆகி நாட்டிற்கு அனுப்பப்பட்டு மீண்டும் சிங்கப்பூர் முயற்சிக்கும் போது சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

எனவே, சிங்கப்பூர் வருவதற்கு முன்னராகவே நாட்டில் Medical Checkup ஒன்று பார்த்து பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றை சரிப்படுத்தி பின்னர் சிங்கப்பூர் வரும்போது தேவையற்ற தடங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments