Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூருக்கு ஜூனில் செல்லும் போது Pass, Permit களுக்கு எடுத்துச்செல்ல தேவையான முக்கியமான டாக்குமெண்ட்ஸ் என்னென்ன?

சிங்கப்பூருக்கு ஜூனில் செல்லும் போது Pass, Permit களுக்கு எடுத்துச்செல்ல தேவையான முக்கியமான டாக்குமெண்ட்ஸ் என்னென்ன?

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் போது சிங்கப்பூர் வேலைக்கான வெவ்வேறு Pass, Permit களுக்கு Documents மாறுபடும். அதிலே, ஒரு Document ஆயினும் எடுத்துச்செல்ல தவற விடுவீர்கள் எனின் நீங்கள் மீண்டும் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அத்துடன், முக்கியமாக உங்களது Documents இல் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்களது விவரம் அனைத்தும் பிழையில்லாமல் சரியானதாக உள்ளனவா என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் உங்களது Passport, Visa, மற்றும் ஏனைய Documentsகளில் உள்ள உங்களது பெயர், முகவரி என்பன சரியானதாக உள்ளனவா என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.

காரணம், சில நேரங்களில் Visa வரும் போது சில தட்டச்சு பிழைகள் காரணமாக உங்களது விவரம் சரியாக பொருந்தாத பட்சத்தில் உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியாமல் போகும். 

அத்துடன் சிங்கப்பூருக்கு முதன் முறையாக செல்கிறீர்கள் எனின் Onboard Slot, Room Registration Certificate போன்றவற்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.

சில Documents எடுத்துச் செல்ல தவறும் பட்சத்தில் Airport இல் வைத்தே உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். 

அதே போன்று ஏனைய Documents இலும் உங்களது விவரம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.

இப்போது என்னென்ன Pass, Permit க்கு என்னென்ன Documents வேண்டும் என விரிவாக பார்ப்போம்.

EPass, SPass, NTS Permit போன்றவற்றிற்கு RMI Certificate (Risk Management Intelligence) கோரப்படுகிறது. RMI Certificate ஆனது கட்டாயம் இல்லை. எனினும், எடுத்து செல்லுவது சிறந்தது. 

EPass க்கான Documentsகளாக Visa, Passport, SG Arrival Card, Vaccine Certificate, Ticket மற்றும் Room Registration Certificate போன்றவை கட்டாயமாகும்.

Vaccine Certificate ஆனது Fully Vaccinated ஆக இருக்க வேண்டும். அத்துடன் Vaccine Certificate இல் உங்களது Passport Number இருக்க வேண்டும். சிங்கப்பூர் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட Vaccine போடப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது, சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் அலை ஒன்று காணப்படுவதால் Vaccine Certificate மிக கட்டாயமாக கோரப்படுகிறது.

அதே போன்று SPass க்கும் மேற்குறிப்பிட்ட EPass க்கு தேவைப்படும் Documents களே வினவப்படுகிறன.

NTS Permit இல் செல்பவர்கள் Visa, Passport, SG Arrival Card, RMI Certificate, Vaccine Certificate, Bond Paper மற்றும் Room Registration Certificate என்பவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Tourist Visa இல் சிங்கப்பூர் வருபவர்கள் SG Arrival Card, Visa போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், Work Permit, PCM, Shipyard Permit என்பவற்றுக்கான Documents களாக Visa, Passport, IP, Ticket, Vaccine Certificate, Bond Paper, Room Registration Certificate, Onboard Slot என்பவற்றை கொண்டு செல்ல வேண்டும். 

IP கைக்கு வந்த பின்னர் Room Registration செய்ய வேண்டும் வேண்டும். அத்துடன், Room Registration Certificate வந்த பின்னர் Onboard Slot Register பன்னுவது சிறந்தது. 

மேலும், சிங்கப்பூருக்கு Student Pass இல் செல்லுபவர்கள் Visa, Passport, Room Registration Certificate, Vaccine Certificate மற்றும் SG Arrival Card என்பவற்றை கொண்டு வர வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சிங்கப்பூர் Pass, Permit க்கான Documents களை தவறாமல் எடுத்துச் செல்லும் போது நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் என்ற அச்சம் இல்லாமல் சிங்கப்பூருக்கு செல்ல முடியும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments