வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல வேண்டுமாயின் சிங்கப்பூர் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு Passயினூடாக செல்ல வேண்டும்.
அந்த வகையில், PSA என்பது அதிகளவானவர்கள் வருகின்ற ஒரு முக்கியமான Pass ஆகும்.
2024ல் PSAயினூடாக வருபவர்களுக்கு வேலை எப்படி இருக்கும், எவ்வளவு சம்பளம், என்னென்ன வேலைகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதலில், PSA என்பது Port of Singapore Authority ஆகும். PSA என்று சொல்லும் போது கப்பல் மற்றும் துறைமுக தளங்களில் உங்களுக்கான வேலைகள் காணப்படும்.
நீங்கள் சிங்கப்பூர் வந்து வாகன ஓட்டுனர் ஆக வேண்டும் எனின், அதற்கு நீங்கள் சிங்கப்பூர் Driving Licence எடுக்க வேண்டும்.
சிங்கப்பூர் Driving Licence எடுப்பதென்றால் கூட ஒன்று முதல் இரண்டு லட்சங்கள் வரை உங்களுக்கு செலவாகலாம்.
ஆனால், நீங்கள் உங்களது நாட்டில் ஏற்கனவே வாகன ஓட்டுனராக இருந்தால், ஏற்கனவே பெரிய வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருப்பின் நீங்கள் PSA இல் நேரடியாக டிரைவர் ஆகவே செல்ல முடியும்.
PSA இல் என்னன்ன வேலைகள் உள்ளதென பார்த்தால் குறிப்பாக டிரைவர் வேலை, லேஷிங் வேலை, Container தொடர்பான வேலைகள், கப்பல் சம்பந்தமான வேலைகள் என இன்னும் பல்வேறு வேலைகள் உள்ளன.
இதில் முக்கியமான வேலைகள் PSA டிரைவிங் மற்றும் PSA லேஷிங் வேலைகள் ஆகும்.
PSA லேஷிங் வோர்க் என்பது கப்பலில் அதிகளவிலான கண்டைனர்ஸ் (Containers) ஏற்றும் போது அவை கீழே விழாதவாறு கம்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி இறுக்கம் பன்னுவது, அதே போன்று கண்டைனர்ஸ் இறக்கும் போது லேஷிங் ஐத் தளர்த்தி கண்டைனர்ஸை இறக்குவது தொடர்பான வேலை ஆகும்.
சிங்கப்பூர் PSA இல் அதிகளவான வேலைகள் இருப்பினும் இந்த லேஷிங் மற்றும் டிரைவிங் வேலைக்கு அதிகமாக ஆட்கள் எடுப்பார்கள்.
PSA வேலைகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கப்பெறும். சிங்கப்பூரில் செலவுகள் போக மிகுதி நாற்பது, ஐம்பதாயிரம் வரை வீட்டிற்கு அனுப்பக்கூடியவாறு இருக்கும்.
PSA வேலையில் Overtime என்பது அதிகமாகவே இருக்கும். Overtime செய்து அதிகமாகவும் சம்பாதிக்கவும் முடியும்.
PSA வேலைகள் ஒவ்வொரு வருடமும் வருகிறது எனின், நேரடியாக தமிழ் நாட்டில் இருந்து ஆட்கள் எடுப்பார்கள். அத்துடன், நீங்கள் வேலைக்குச் செல்லும் முன் உங்களது வேலைக்கான டிரைனிங் கொடுக்கப்படும்.
இதற்கு நீங்கள் பணம் கொடுத்து டிரைனிங்கில் கலந்து கொள்ளும் விதமாக அமையும்.
PSA வேலைகளுக்கு தமிழ் நாட்டில் இருந்து ஆயிரம் பேருக்கு டிரைனிங் கொடுத்தால் அதில் திறமையான 300 தொடக்கம் 400 வரையான நபர்களை வேலைக்கு எடுப்பார்கள். மீதமுள்ளவர்கள் அடுத்தமுறை வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது முயற்சிக்கலாம்.
இதில் ஏஜண்டைப் பொருத்து, உங்களிடம் வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுக்கின்றவர்களும் கொடுக்காத ஏஜன்ட்களும் இருக்கிறார்கள்.
PSA வேலைகள் ஏனைய வேலைகளைப் பார்க்க சற்று கடினமாக அமையும். இது மிகவும் முக்கியமாக கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.
இந்த வேலைகளுக்காக உங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு சென்றால் உங்களால் நன்றாக வேலை செய்ய முடியும்.
மேலும், சில சமயம் PSA வேலைகள் உங்களுக்கு கடினமாக இருந்தால் வேறு வேலைகளுக்கு கூட முயற்சி செய்யலாம்.
அத்துடன், 2024 இற்கு இன்னும் PSA இற்கு ஆட்கள் தெரிவு நடைபெறவில்லை. தெரிவு நடைபெறும் போது அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் 2024 இல் என்னென்ன Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம் இதோ!
- சிங்கப்பூரில் S Pass க்கு 2024ல் வந்துள்ள Quota வழிமுறைகள் என்னென்ன? சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது!
- சிங்கப்பூரில் வேலைக்கு ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைகொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்கள் கைக்கு கிடைக்கிறது
- சிங்கப்பூருக்கு ஜூனில் செல்லும் போது Pass, Permit களுக்கு எடுத்துச்செல்ல தேவையான முக்கியமான டாக்குமெண்ட்ஸ் என்னென்ன?
- சிங்கப்பூரில் Electrical, Excavator Operator வேலைகள் எப்படி இருக்கிறது? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?