சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக நன்றாக படித்து Degree, Diploma எடுத்தவர்கள், மற்றும் ஓரளவு படித்தவர்கள் என இருவரும் வருகிறனர்.
நன்றாக படித்தும் படித்ததற்கு ஏற்ற வேலை சிங்கப்பூரில் இலகுவில் சிலருக்கு கிடைப்பதில்லை.
காரணம் என்னவென்றால், விரைவாக சிங்கப்பூர் வந்து விட வேண்டும் என கிடைக்கும் எந்த வேலையாயினும் அதற்கு வந்துவிடுவது அல்லது Agentயினால் நல்ல வேலைதான் என சொல்லப்பட்டு ஏமாற்றப்படுவதாகும்.
ஓரளவாக படித்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் கூட SGD $2,200 வரையில் சம்பளமாக வாங்க முடியும்.
ஆரம்பத்தில் சிங்கப்பூருக்கு Work Permitயில் வருகிறீர்கள் என்றால் ஏதாயினும் Skill Test அடித்த பின்னர் வருவீர்கள். ஆரம்ப நாட்களில், சிங்கப்பூரில் Work Permit வேலைக்கு நாளொன்றுக்கு SGD $18 முதல் SGD $20 வரை சம்பளமாக தருவார்கள்.
மேலும், Overtime செய்து மாதத்திற்கு ஆரம்பத்தில் SGD $750 தொடக்கம் SGD $850 வரையில் சம்பளம் வாங்க முடியும்.
Work Permitயில் சிங்கப்பூர் வேலைக்கு வருகிறீர்கள் எனின், தங்குமிடம் பெரும்பாலும் கம்பனி கொடுக்கும். எனவே, தங்குமிடத்திற்கு என தனியான செலவு ஒன்று இருக்காது.
Skilled Test அடித்து Work Permitயில் சிங்கப்பூர் வந்து கம்பனி சரியில்லை என திரும்ப நாட்டுக்கு போய்விட்டு மீண்டும் சிங்கப்பூர் வரும் போது ஏனைய Passகளைப் பார்க்க குறைவாகவே கட்ட வேண்டும். இது Work Permitயில் உள்ள நல்ல விடயமாகும்.
குறிப்பிட்ட காலம் போகும் போது நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விடயம் என்னெவெனில், உங்களுடைய வேலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நீங்கள் தற்போது செய்யும் வேலைக்கு பொருத்தமான Course ஒன்றைத் தொடர்வது தான்.
உதாரணமாக பார்த்தால் சிங்கப்பூரில் கட்டுமானத்தில் அதிகமான வேலைகள் உள்ளன. எனவே, நீங்கள் கட்டுமானத்துறையில் வேலை செய்கிறீர்கள் எனின் அது தொடர்பான ஒரு Diplomaவை சிங்கப்பூரில் தொடருங்கள்.
ஒன்று அல்லது இரண்டு வருடம் ஆரம்பத்தில் கிடைக்கும் வேலையை செய்து கொண்டே ஏதாவது பொருத்தமான Diplomaவை தொடருங்கள்.
Diploma Course என்பதால் படித்து முடிப்பதற்கு சராசரியாக ஒரு வருட காலம் எடுக்கும். எனவே, மாலை நேரங்களில் அல்லது ஞாயிற்றுக்கிழமை போன்ற கம்பனி விடுமுறை நேரங்களில் Courseகளை பின்தொடருங்கள்.
Diploma Course என்பதால் SGD $2,200 தொடக்கம் SGD $2,800க்குள்ளேயே அதற்கான செலவு வரும். Courseக்கு செலுத்தும் பணமானது செய்யும் Course பொருத்து மாறுபடும்.
சிங்கப்பூர் சென்று மேலும் மேலும் முன்னேறுவதற்கு இருக்கக்கூடிய ஒரே பொருத்தமான வழி இதுதான். தற்போது, சிங்கப்பூரில் வேலைசெய்யக் கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் இதைத்தான் பின்பற்றுகிறார்கள்.
சில ஊழியர்களுக்கு கம்பனியே Course படிக்க செலவு செய்யும். சிலருக்கு தங்களுடைய பணத்தில் Course செய்ய வேண்டி வரும்.
கம்பனி செலவு செய்து Course செய்யும் போது குறிப்பிட்ட காலம் அதே கம்பனியிலே வேலை செய்ய வேண்டி வரும்.
மூன்று வருடங்கள் வேலை செய்கிறீர்கள், மேலும் Courseயையும் முடித்து விட்டீர்கள் என்றால், இந்த நேரத்தில் கம்பனியில் அந்த Courseக்கான நல்ல இடம் காணப்படும் போது நீங்கள் நல்ல சம்பளம் தரக்கூடிய பாஸ்களுக்கு மாற முடியும்.
அல்லது, Work Permitயிலேயே நல்ல சம்பளம் தரும் வேலைகளும் சிங்கப்பூரில் அதிகமாகவே உள்ளன. எனவே, அவற்றில் மாறி நல்ல சம்பளம் பெற முடியும்.
நல்ல அனுபவமும் மற்றும் Diplomaம் இருக்குதென்றால் கட்டாயம் சிங்கப்பூரில் அதற்கு ஏற்ற வேலை கட்டாயம் கிடைக்கும்.
தற்போது Work Permitயில் வேலை செய்து Overtime உட்பட செய்து மாதம் SGD $2,200 வரையில் சம்பளம் பெறக்கூடியவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
நன்றாகப் படித்து சிங்கப்பூர் வந்து பிடித்த வேலை கிடைக்காவிட்டாலும் இருக்கின்ற வேலையை நன்றாக செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த வேலைக்கு முயற்சி செய்துகொண்டே இருங்கள். கட்டாயம் அது கிடைக்கும்.
மேலும் வாசிக்க
- இனி வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்ல RMI Certificate கட்டாயமா! யாரெல்லாம் எடுக்க வேண்டும்! எப்படி எடுப்பது?
- Skill Test அடிக்காமல் சிங்கப்பூரில் நல்ல சம்பளத்துடன் வேலைக்கு வர வேண்டுமா? PSA தான் இதற்கான பெஸ்ட் சாய்ஸ்
- சிங்கப்பூரில் 2024 இல் என்னென்ன Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம் இதோ!
- சிங்கப்பூரில் S Pass க்கு 2024ல் வந்துள்ள Quota வழிமுறைகள் என்னென்ன? சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது!
- சிங்கப்பூரில் வேலைக்கு ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைகொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்கள் கைக்கு கிடைக்கிறது