Wednesday, October 30, 2024
Homeசிங்கப்பூர்Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய...

Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்!!

சிங்கப்பூரில் வேலைக்கு நன்றாக படித்தவர்கள், ஓரளவு படித்தவர்கள் என இரண்டு தரப்பினரும் வருகிறனர். 

நன்றாக படித்தும் படிப்புக்கு ஏற்ற வேலை சிங்கப்பூரில் எளிதில் சிலருக்கு கிடைப்பதில்லை. காரணம் விரைவாகவே சிங்கப்பூர் வந்து விட வேண்டும் என கிடைத்த எந்த வேலையாயினும் வந்து விடுவது அல்லது Agentயினால் ஏமாற்றப்படுவது ஆகும்.

ஓரளவாக படித்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் SGD $2,500 வரையிலும் சம்பளமானது வாங்க முடியும்.

ஆரம்பத்தில் சிங்கப்பூருக்கு Work Permitயில் வருகிறீர்கள் எனின் ஏதாயினும் Skill Test அடித்து வருவீர்கள். ஆரம்பத்திலே, சிங்கப்பூரில் நாளொன்றுக்கு SGD $18 முதல் SGD $20 வரை சம்பளமாக தருவார்கள்.

Overtime உம் செய்து உங்களால் மாதத்திற்கு ஆரம்பத்தில் SGD $700 தொடக்கம் SGD $800 வரையில் சம்பாதிக்க முடியும். 

Work Permitயில் வருகிறீர்கள் எனின் தங்குமிடம் என்பது பெரும்பாலும் கம்பனியால் கிடைக்கப்பெறும். எனவே, தங்குமிடத்திற்கு என செலவு ஒன்று இருக்காது.

Work Permit இல் அதாவது Skilled Test அடித்து சிங்கப்பூர் வந்து கம்பனி சரியில்லை என திரும்ப நாட்டுக்கு போய்விட்டு மீண்டும் சிங்கப்பூர் வரும் போது பணம் என்பது ஏனைய Pass களைப் பார்க்க குறைவாகவே கட்ட வேண்டி வரும். இது Work Permitயில் இருக்கும் நன்மையான விடயமாகும்.

குறிப்பிட்ட காலம் போகும் போது நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விடயம் என்னெவென்றால் உங்களுடைய வேலை நேரம் தவிர்த்து ஏனைய நேரங்களில் நீங்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமான Course ஒன்றைத் தொடர்வது தான்.

உதாரணமாக கட்டுமானத்துறையில் அதிகமான வேலைகள் இருக்கிறன. எனவே, நீங்கள் கட்டுமானத்துறையில் வேலை செய்கிறீர்கள் எனின் அது தொடர்பான ஒரு Diplomaவை சிங்கப்பூரில் தொடருங்கள்.

ஒன்று அல்லது இரண்டு வருடம் ஆரம்பத்தில் கிடைக்கும் வேலையை செய்து விட்டு அதன் பின்னர் ஏதாவது பொருத்தமான Diplomaவை படியுங்கள்.

Diploma Course எனும் போது படித்து முடிப்பதற்கு ஒரு வருட காலம் எடுக்கும். எனவே, மாலை நேரங்களில் அல்லது ஞாயிற்றுக்கிழமை போன்ற கம்பனி விடுமுறை நாட்களில் அந்த Course களை பின்தொடருங்கள்.

Diploma Course எனும்போது SGD $2,200 தொடக்கம் SGD $2,800க்குள்ளேயே வரும். Courseக்கான பணமானது செய்யும் Course பொருத்து மாறுபடும்.

சிங்கப்பூர் சென்று முன்னேறுவதற்கு இருக்கக்கூடிய ஒரே பொருத்தமான வழி இது ஒன்றுதான். தற்போது, சிங்கப்பூரில் இருக்கக்கூடிய அதிகமானோர் பின்பற்றி வெற்றியடையும் ஒரே வழி இதுதான்.

சிலருக்கு கம்பனியே Course படிக்க செலவு செய்யும். சிலருக்கு தங்களுடைய பணத்தைக்கொண்டே Course செய்ய வேண்டி வரும். 

கம்பனி செலவு செய்து Course படிக்கும் போது குறிப்பிட்ட காலம் அந்த கம்பனியிலே வேலை செய்ய வேண்டி வரும்.

மூன்று வருடங்கள் வேலை செய்கிறீர்கள், அத்துடன் Courseயும் முடித்து விட்டீர்கள் எனின், இந்த நேரத்தில் கம்பனியில் அந்த Courseக்கான நல்ல இடம் காணப்படும் போது நீங்கள் அதிகளவான சம்பளம் கிடைக்கக்கூடிய பாஸ்களுக்கு மாறிக்கலாம். 

அல்லது, Work Permit இலேயே நல்ல சம்பளங்கள் தரக்கூடிய வேலைகளும் சிங்கப்பூரில் உள்ளன. அவற்றில் மாறி நல்ல சம்பளங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

நல்ல அனுபவமும் இருக்கு, அதே போன்று Diploma உம் இருக்கு எனின் கட்டாயம் அதற்கு ஏற்ற வேலை கிடைக்கும்.

தற்போது Work Permitயில் வேலை செய்து Overtime உட்பட செய்து மாதம் SGD $2,500 வரையில் சம்பளம் பெறக்கூடியவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் சென்று ஆரம்பத்திலே நன்றாக வந்தவர்கள் நூற்றுக்கு இரண்டு வீதம் அப்படித்தான் இருப்பார்கள். மிகுதிப் பேர் Courses செய்து முன்னேறியவர்களே ஆகும். 

நன்றாகப் படித்து சிங்கப்பூர் வந்து பிடித்த வேலை கிடைக்காவிட்டாலும் இருக்கின்ற வேலையை நன்றாக செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த வேலைக்கு முயற்சி செய்துகொண்டே இருங்கள். கட்டாயம் அது கிடைக்கும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments