Friday, November 8, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் தற்போது Safety Supervisor வேலை, Course எப்படி இருக்கு? எவ்வளவு செலவாகும்? சம்பளம் எவ்வளவு?

சிங்கப்பூரில் தற்போது Safety Supervisor வேலை, Course எப்படி இருக்கு? எவ்வளவு செலவாகும்? சம்பளம் எவ்வளவு?

சிங்கப்பூருக்கு Test அடித்தோ அல்லது SPass, EPass போன்ற Permit களின் ஊடாக வேலைக்கு வர முடியும்.

அதேபோன்று அதிகமானவர்கள் PCM, Shipyard, Work Permit போன்ற Permit களின் ஊடாக சிங்கப்பூர் வருகிறார்கள்.

Safety Supervisor என்பது நீங்கள் வேலை செய்யும் கம்பனியில் ஊழியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா, பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை பார்க்கும் ஒரு வேலையாகும்.

நீங்கள் PCM, Shipyard, Work Permit போன்ற Permit களின் ஊடாக சிங்கப்பூர் வந்தவர்கள் எனின் சம்பளம் என்பது ஏனையவற்றுடன் ஒப்பிடும் போது குறைவாகவே கிடைக்கும்.

எனவே குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின்னர் சம்பளத்தை அதிகரிப்பதற்கு சரியான வழி சிங்கப்பூரில் Courses படிப்பதுதான்.

அந்த வகையயில் Safety Supervisor Course அதிகமானவர்களால் தெரிவு செய்யப்படும் ஒரு Course ஆகும்.

ஏனெனில் வேலை என்பது அவ்வளவு கடினமாக இருக்காது, அத்துடன் சம்பளமும் முந்தைய நாட்களைப் பார்க்க அதிகமாகத்தான் இருக்கும்.

எனவே, 6 மாதம் அல்லது 1 வருடம் வேலை செய்த பின்னர் Course செய்து மேலும் மேலும் உயர் பதவிக்கு செல்லுவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

Safety Supervisor Course படிப்பதற்கு சிங்கப்பூரில் நிறைய Instituteகள் இருக்கிறன. 

கீழே Safety Supervisor Course பிரபலமான 5 இடங்களை குறிப்பிடுகிறோம். நீங்கள் சிங்கப்பூரில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் Courseயை படிக்கலாம். 

  • Eversafe Academy Pte. Ltd.
  • KBA Training Centre Pte Ltd
  • Absolute Kinetics Consultancy Pte Ltd (AKC)
  • Singapore Safety Training Centre (SSTC)
  • Management Development Institute of Singapore (MDIS)

Safety Supervisor Course படிப்பதற்கான செலவாக SGD $350 தொடக்கம் SGD $400 வரை செலவாகலாம்.

Courseக்கான கட்டணமானது Course படிக்கும் இடத்தைப் பொருத்து மாறுபடும்.

மேலும், இந்த Course படிப்பதற்கான எடுக்கும் காலப்பகுதி 4 நாட்களாகும். மேலும், மாலை நேரங்களில் மட்டும் உங்களுக்கு படிக்க முடியும் எனின் Courseக்கான காலம் 8 நாட்களாகும்.

உங்களுடைய வேலை நேரத்திற்கு ஏற்றாற்போல் Courseயை படிக்க முடியும். Course படித்து முடிந்த பின்னர் அதற்குறிய Exam நடைபெறும்.

Exam ஆனது ஆங்கில மொழியில் நடத்தப்படுவதால் ஆங்கிலமானது எழுத வாசிக்க தெரிந்திருப்பது இங்கு கோரப்படுகிறது.

மேலும், Examயில் Pass ஆகிய பின்னர் Certificate வழங்கப்படும். எனவே, அந்த Certificateயை எடுத்துக்கொண்டு வேலை செய்யும் கம்பனியில் கொடுத்து Safety Supervisor ஆக முடியும்.

Safety Supervisorக்கு பொறுப்புகள் அதிகமாகும். ஏனெனில், வேலைத்தளத்தில் விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் முதலில் கேள்வி கேட்கப்படுவது Safety Supervisorயிடம் தான். எனவே, வேலையில் கவனம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

நாள் சம்பளமாக Safety Supervisor க்கு General Workerயைப் பார்க்க SGD $2 முதல் SGD $5 வரை மேலதிகமாக கிடைக்கப்பெறும். அனுபவம் அதிகரிக்கும் போது சம்பளமானது உயர்வாக கிடைக்கும்.

மேலும், Safety Supervisor ஆக பணிபுரிந்த பின்னர் அதற்கு மேலே உள்ள பதவிகளுக்கு Course படித்து அந்த வேலைகளுக்கு செல்ல முடியும்.

முடிந்த வரையிலும் உங்களுடைய திறன்களை வளர்த்து மேலே செல்ல முயற்சியுங்கள்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments