Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்தற்போது சிங்கப்பூரில் Shipyard, PCMயிலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!

தற்போது சிங்கப்பூரில் Shipyard, PCMயிலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!

சிங்கப்பூரில் வேலைக்காக ஏஜண்ட்க்கு பல லட்சங்கள் செலவுசெய்து தான் அதிகமானோர் இங்கே வருகிறார்கள். மேலும், சிலர் Skill Test அடித்தும் சிங்கப்பூரில் வேலைக்கு வருகிறார்கள்.

சிங்கப்பூரில் வேலைக்காக நடைமுறையில் உள்ள Pass, Permitகளைப் பொருத்து கம்பனியில் தரப்படும் சம்பளமானது மாறுபடும்.

Shipyard, PCM போன்ற Permitயினூடாக சிங்கப்பூரில் வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு S Passயைப் பார்க்க குறைவான சம்பளமே கிடைக்கிறது.

Shipyard, PCM இல் உள்ள வேலைகளுக்கு SGD $500 முதல் SGD $1,000 வரை சம்பளமாக கிடைக்கப்பெறும் அதேவேளை S Pass க்கு SGD $2,000 க்கும் அதிகமாகவே கிடைக்கப்பெறும்.

எனவே, குறைவான சம்பளத்தில் Shipyard, PCM போன்ற Permitகளில் சிங்கப்பூர் வருபவர்கள் S Pass போன்ற நல்ல சம்பளம் தரக்கூடிய வேலைக்கு மாறுவதற்கு விரும்புகிறார்கள்.

S Passக்கு மாறுவது என்பது உங்களது விடாமுயற்சியில் தான் இருக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில படிமுறைகள் உள்ளன. 

உதாரணமாக, நீங்கள் ஒரு டிப்ளோமா முடித்துவிட்டு (Mechanical, Civil, Electrical…) வருகிறீர்கள் எனின் கம்பனியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உங்களது துறைக்கு பொருத்தமான Part Time Course ஒன்றினை தொடந்து அதில் Certificateயை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் Course ஒன்றினைத் தொடரும் போது அது உங்களுடைய Skillsயை மேலும் உயர்த்திட உதவும்.

சிங்கப்பூரில் எடுக்கும் சம்பளத்தில் நாட்டிற்கு அனுப்பி மீதம் போக உங்களுடைய திறமையை வளர்ப்பதற்காக கொஞ்சம் வைத்திருங்கள்.

தற்போதைய கம்பனியில் குறிப்பிட்ட காலம் வேலை பார்க்கும் போதே (2, 3 வருடங்கள்) சிங்கப்பூரில் உள்ள வேலை தேடும் வெப்சைட்களில் உங்களுடைய துறைக்கு ஏற்ற S Pass வேலைகளை தேடுங்கள்.

சிங்கப்பூரில் இருந்து கொண்டு சிங்கப்பூர் Jobs Websites இல் வேலைதேடும் போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. உங்களுடைய Skills ஐப் பொருத்து வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இங்கு அதிகமாகும்.

Indeed, JobsCentral, JobStreet, MyCareersFuture, STJobs… போன்ற வேலை தேடும் வலைத்தளங்களில் உங்களுடைய துறை தொடர்பான வேலைகளைத் தேடிக்கொள்ள முடியும்.

நன்றாக முயற்சித்தும் கிடைக்காத பட்சத்தில் சிங்கப்பூரில் உள்ள ஏஜன்ட் ஊடாக S Pass வேலைக்கு முயற்சிக்க வேண்டும். மிகவும் நம்பத்தகுந்த ஏஜன்டாக இருந்தால் மட்டும் பணத்தைக் கட்டுங்கள்.

ஏஜண்ட் மூலமாகவோ அல்லது வெப்சைட் மூலமாகவோ S Pass வேலை கிடைக்கும் போது மனிதவள அமைச்சிலிருந்து S Passக்கான Approval கட்டாயமாக எடுக்க வேண்டும்.

ஆரம்ப சம்பளமான SGD $500 இலிருந்து S Pass சம்பளமான SGD $2,000 க்கு மாறுவது என்பது இலகுவான விடயமல்ல, எனவே மனிதவள அமைச்சில் Apply செய்யும் போது S Pass ஆனது Cancel ஆகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறன.

எனவே, மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். இந்த முயற்சியானது சற்று கடினமானது தான். இருப்பினும், இந்த வழியினூடாக S Pass எடுத்து வேலை செய்பவர்களும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்.

புதிய கம்பனியிற்கு S Pass இன் ஊடாக வேலைக்கு செல்லும் போது கட்டாயமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஏற்கனவே உள்ள உங்களுடைய Permitயை Cancel செய்திட வேண்டும்.

மேலும், முக்கியமான விடயம் என்னவென்றால் தற்போது 2024 இல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான S Pass Quota என்பது குறைக்கப்பட்டுள்ளது. 

எனவே உங்களது Sectorயில் வரையறுக்கப்பட்ட Quota அளவுகளை கருத்திற்கொண்டு முயற்சி செய்யுங்கள்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments