Wednesday, October 30, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் Shipyard, PCM இலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!

சிங்கப்பூரில் Shipyard, PCM இலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!

சிங்கப்பூரில் வேலைக்காக ஏஜண்ட்க்கு பல லட்சங்கள் செலவழித்து தான் அதிகமானோர் வருகிறார்கள். சிலர் Skill Test அடித்தும் வேலைக்கு வருகிறார்கள்.

சிங்கப்பூருக்கு வரும் Pass, Permit ஐப் பொருத்து கம்பனியில் கிடைக்கப்பெறும் சம்பளமானது மாறும்.

Shipyard, PCM போன்ற Permit இனூடாக சிங்கப்பூருக்கு வரும் ஊழியர்களுக்கு S Pass ஐப் பார்க்க குறைவான சம்பளமே கிடைக்கப்பெறுகிறது.

Shipyard, PCM போன்றவற்றிற்கு SGD $500 முதல் SGD $1000 வரை சம்பளமாக கிடைக்கப்பெறும் அதேவேளை S Pass க்கு SGD $3000 க்கும் அதிகமாகவே கிடைக்கப்பெறும்.

எனவே குறைந்த சம்பளத்தில் Shipyard, PCM போன்றவற்றில் சிங்கப்பூர் வருபவர்கள் S Pass போன்ற அதிக சம்பளம் தரக்கூடிய வேலைக்கு மாறுவதற்கு விருப்பப்படுவார்கள்.

S Pass க்கு மாறுவது என்பது உங்களது முயற்சியில் தான் இருக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில செயல்முறைகள் உள்ளன. 

உதாரணமாக, நீங்கள் ஒரு டிப்ளோமா முடித்துவிட்டு (Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering…) வருகிறீர்கள் எனின் கம்பனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே உங்களது துறைக்கு ஏற்ற Part Time Course ஒன்றை தொடந்து அதில் Certificateயை எடுத்து வைத்திருங்கள்.

சிங்கப்பூரில் Course ஒன்றைத் தொடரும் போது அது உங்களுடைய Skillsயை மேலும் உயர்த்திட உதவும்.

எடுக்கும் சம்பளத்தில் வீட்டிற்கு அனுப்பி மீதம் போக உங்களுடைய முன்னேற்றத்திற்காக கொஞ்சம் வைத்திருங்கள்.

தற்போதைய கம்பனியில் குறிப்பிட்ட காலம் வேலை செய்து கொண்டுபோகும் போதே (2, 3 வருடங்கள்) சிங்கப்பூரில் உள்ள வேலை தேடும் வெப்சைட்களில் உங்களுடைய துறைக்கு ஏற்ற S Pass வேலைகளை தேட வேண்டும்.

சிங்கப்பூரில் இருந்து கொண்டே சிங்கப்பூர் Jobs Websites இல் முயற்சிக்கும் போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய Skills ஐப் பொருத்தே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

JobStreet, JobCentral, MyCareersFuture, Indeed, STJobs போன்ற Jobs Websites களில் உங்களுடைய Sectorக்கான வேலைகளைத் தேடிக்கொள்ள முடியும்.

முடியாத பட்சத்தில் சிங்கப்பூரில் உள்ள ஏஜன்ட் ஊடாக S Pass வேலைக்கு முயற்சிக்க வேண்டும். நம்பத்தகுந்த ஏஜன்டாக இருந்தால் மட்டும் பணத்தைக் கட்டுங்கள்.

வெப்சைட் மூலமாகவோ அல்லது ஏஜண்ட் மூலமாகவோ S Pass இல் வேலை கிடைக்கும் போது மனிதவள அமைச்சில் இருந்து (MOM) S Pass க்கான Approval கட்டாயமாக எடுக்க வேண்டும்.

SGD $500 இலிருந்து SGD $3000 க்கு மாறுவது என்பது இலகுவான விடயமல்ல, எனவே MOM இல் Apply செய்த S Pass ஆனது Cancel ஆகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறன.

எனவே, மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். இந்த முயற்சி என்பது கடினமானது தான். இந்த வழியினூடாக S Pass எடுத்து வேலை செய்பவர்களும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்.

புதிய கம்பனியிற்கு S Pass இன் ஊடாக வேலைக்கு செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ஏற்கனவே உள்ள Permit ஐ Cancel செய்திட வேண்டும்.

மேலும், முக்கியமான விடயம் என்னவென்றால் தற்போது 2024 இல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான S Pass Quota என்பது குறைக்கப்பட்டுள்ளது. 

எனவே உங்களது Sectorயில் வரையறுக்கப்பட்ட Quota அளவுகளை கருத்திற்கொண்டு முயற்சி செய்யுங்கள்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments