சிங்கப்பூருக்கு பல்வேறு வேலைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஊழியர்கள் வருகிறார்கள்.
வெவ்வேறு Pass களின் ஊடாக வருபவர்களுக்கு வெவ்வேறு வேலைகள் உண்டு.
அந்த வகையில் அதிகமானோர் General Worker ஆக சிங்கப்பூர் வருகிறனர்.
General Worker ஆக வருபவர்கள் அதிகமாக தெரிவுசெய்யும் வேலை தான் Driving ஆகும்.
Driving வேலைக்கு போகும் முதல் Driving Licence தேவைப்படும். Driving வேலைகளுக்கு சற்று அதிகமான சம்பளம் கொடுக்கப்படும்.
கம்பனிகள் மற்றும் வேலையைப் பொருத்து சம்பளம் ஆனது மாறுபடும். பொதுவாக SGD $1,600 முதல் SGD $2,000 வரை சம்பளமாகப் பெறுகிறனர்.
சிங்கப்பூரைப் பொருத்தவகையில் Driving Licence எடுப்பது சற்று கடினமாகும். அதே வகையில் Licence எடுப்பதற்கான செலவும் அதிகமாகும்.
அதே போன்று PDL எடுத்த பின்னர் Class Attend பன்னுவதற்கான Waiting Time உம் சற்று அதிகமாகும். அதாவது, 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை ஆகலாம்.
மேலும், Driving Licence எடுப்பதற்கான செலவு என பார்க்கும் போது SGD $2,200 முதல் SGD $2,800 வரை செலவாகும்.
முதலில், Driving Licence எடுப்பதற்கு Register செய்ய வேண்டும். இதன் போது Eye Test, Photo என்பன எடுக்கப்படும். இதற்கு SGD $200 முதல் SGD $280 வரை செலவாகும்.
Register செய்த பின்னர் உங்களுக்கான ஒரு Account தரப்படும். அதில் உங்களுடைய விவரம் மற்றும் Progress என்பவற்றைப் பார்க்க முடியும்.
அதன் பின்னர் Theory Exam எழுத வேண்டியிருக்கும். இரண்டு வகையான Exams உள்ளன. அவை Basic Theory Exam மற்றும் Final Theory Exam ஆகும்.
Exam ஐ உங்களுக்கு அறிமுகமான மொழியில் படித்து எழுத முடியும். Basic, Final என புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் பெற்று படிக்க முடியும்.
Theory க்கான Class நடைபெறும். Practice, Evaluation என Basic, Final இல் காணப்படும். அவற்றை முடிக்க வேண்டும்.
பின்னர் Exam இல் Pass ஆகிய பின்னர் உங்களுக்கான PDL (Provisional Driving Licence) ஐ எடுக்க வேண்டும். இதற்கு SGD $25 வரை செலவாகும்.
PDL எடுத்த பின்னர் Driving Class Book பன்ன வேண்டும். 25 முதல் 30 Classes வரை Attend பன்னுவது சிறந்தது.
அனைத்து Class ஐயும் சிறப்பாக Attend பன்னிய பிறகு இறுதியாக இருப்பது Final Driving தான்.
இதில் Inspect பன்னுவதற்காக Traffic Police கூடவே இருப்பார். கற்றுக்கொண்ட விடயங்களைப் பயன்படுத்தி Pass ஆக வேண்டும். Final Driving இல் Pass ஆகினால் Driving Licence எடுக்க முடியுமாக இருக்கும்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள்! சம்பளம், DRC மாற்றங்கள்!
- 2024 இல் சிங்கப்பூருக்கு செல்ல எந்தெந்த Pass, Permit Visaக்களுக்கு எவ்வளவு Approval காலம் எடுக்கும்?
- 2024 இல் S Pass க்கு வந்துள்ள Quota வழிமுறைகள்! சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது?
- வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்லும் போது RMI Certificate கட்டாயமா? யாரிடம், எப்படி எடுப்பது!
- 2024 இல் சிங்கப்பூரில் எந்தெந்த Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம்!