Wednesday, October 30, 2024
Homeசிங்கப்பூர்இனி வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்ல RMI Certificate கட்டாயமா! யாரெல்லாம் எடுக்க வேண்டும்! எப்படி...

இனி வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்ல RMI Certificate கட்டாயமா! யாரெல்லாம் எடுக்க வேண்டும்! எப்படி எடுப்பது?

இப்போதெல்லாம் சிங்கப்பூருக்கு நன்றாகப் படித்து டிகிரி எடுத்தவர்களும், அதே போன்று Diploma மற்றும் ஏனைய Certificate Course படித்தவர்களும் வேலைக்கு வருகிறார்கள்.

அதில் சிலர், போலியான Certificateகளை பெற்று சிங்கப்பூருக்கு வேலைக்கு வருகிறனர்.

போலியான Certificate எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் வரும் போது அவர்கள் பிடிபடும் சந்தர்ப்பத்தில் சிறை செல்லக்க்கூட நேரிடும். அத்துடன் தண்டப்பணமும் செலுத்த வேண்டி நேரிடும்.

எனவே இந்த பிரச்சனைகளைத் குறைக்கும் விதமாக மனிதவள அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வழிமுறைதான் RMI ஆகும்.

RMI (Risk Management intelligence) என்பது உங்களது கல்வித்தகைமைகளை மனிதவள அமைச்சகத்தினால் உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறை ஆகும். இந்த வழிமுறையின் மூலமாக மனிதவள அமைச்சகத்தால் உறுதிப்படுத்திய RMI Certificate உங்களுக்கு வழங்கப்படும்.

சிங்கப்பூர் செல்லும் போது இந்த RMI Certificate கட்டாயம் அவசியமா என கேட்டால், RMI Certificate எடுத்துக்கொள்ளுவது மிகவும் சிறந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஏனெனில், உங்களது Visa விரைவில் Approve ஆகுவது, விரைவாக வேலைக்கு சேர்வது போன்ற பல சிறப்பம்சங்களை RMI Certificate எடுப்பது மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன், RMI Certificate எடுத்து வைத்திருப்பவர்களுக்கு கம்பனிகள் முன்னுரிமை அளிக்கின்றன.

ஏனென்றால், தற்போது போலி Certificate எடுத்துக்கொண்டு சிங்கப்பூருக்குள் செல்லுவது அதிகமான காரணத்தால் RMI Certificate எடுத்து வைத்திருப்பதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

மேலும், சில கம்பனிகளில் வேலைக்கு போகும் போது இந்த RMI Certificate ஐ கட்டாயமாக கேட்கின்றன. 

இனி வரும் காலங்களில், அனைத்து கம்பனிகளும் RMI Certificate கேட்கும் நிலைமைக்கு கூட வரலாம்.

நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் போது RMI Certificate எடுத்துக்கொண்டு செல்லலாம், அல்லது சிங்கப்பூர் சென்ற பின்னரும் RMI Certificate பெற்றுக்கொள்ளலாம்.

நாட்டிலிருந்து சிங்கப்பூர் செல்லும் போது RMI Certificate எடுத்துத் செல்லுவது பொருத்தமானதாக கூறப்படுகிறது. ஏனெனில், சிங்கப்பூர் சென்று RMI Certificate எடுக்கும் போது சில நேரங்களில் Certificate கிடைக்க தாமதம் ஆகும் போது வேலைக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

RMI Certificate ஐ மனிதவள அமைச்சின் வலைத்தளத்தில் RMI பிரிவுக்கு சென்று அப்ளை செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லது, ஏஜென்சி மூலமாக நீங்கள் செல்லும் போது அவர்களின் மூலமாகவும் RMI Certificate எடுத்துக்கொள்ள முடியும்.

அமைச்சின் வெப்சைட்டில் அப்ளை செய்வதெனில் இதற்கு S$98.10 செலவாகும். ஆனால், ஏஜென்சி மூலமாக எடுக்கும் போது RMI Certificate எடுப்பதற்கான செலவு அதிகமாகலாம்.

சரியான முறைப்படி உங்களுக்கு RMI Certificate எடுக்கத் தெரியாதெனில் ஏஜென்சி மூலமாக பெற்றுக்கொள்வது நல்லது.

காரணம், Certificate பெற ஏதும் தகவல்கள் தவறாக கொடுக்கும் போது RMI பெற்றுக் கொள்வதற்கு கால தாமதம் ஆகலாம். 

ஏஜென்சி மூலம் எடுக்கும் போது அவர்கள் சரியான முறையில் அப்ளை செய்து Certificate ஐப் பெற்றுக் கொடுப்பார்கள்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments