வேலைக்காக சிங்கப்பூருக்கு செல்பவர்களின் முதன்மையான நோக்கமே செல்லும் காலத்தில் நன்றாக சம்பாதிப்பது தான்.
சிங்கப்பூர் கம்பனிகளுக்கு வேலைக்கு செல்லும் போது எமக்கு மனிதவள அமைச்சகத்தால் (MOM) விதிமுறைகள் போடப்பட்டு இருப்பது போன்று கம்பனிகளுக்கும் இறுக்கமான விதிமுறைகள் இருக்கிறன.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் விதிமுறைகள் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். கம்பனிகளும் அந்த விதிமுறைகளை மீறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே என்னென்ன விதிமுறைகள் ஏற்கனவே உள்ளன, மற்றும் புதிய விதிமுறைகளை இப்போது பார்ப்போம்.
வேலைக்கு செல்வதன் நோக்கமே சம்பாதிப்பதுதான். எனவே, கம்பனிகள் உங்களுடைய மாதாந்த சம்பளத்தை மாதத்தின் முதல் வாரத்திலேயே போட்டு விட வேண்டும்.
அதாவது 1ம் தேதி முதல் 7ம் தேதி வரையுள்ள நாட்களில் கட்டாயம் சம்பளமானது போடப்பட வேண்டும்.
இல்லையெனின், இத் தேதியினுள் உங்களுக்கு சம்பளம் வரவில்லை எனில் நீங்கள் நேரடியாகவே மனிதவள அமைச்சகத்தில் புகாரளிக்க முடியும். நீண்ட நாட்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை எனின், மனிதவள அமைச்சகத்தால் சம்பளமானது கம்பனியிடமிருந்து வாங்கி தரப்படும்.
அடுத்ததாக கம்பனியில் வேலை செய்யும் நாட்களில் உங்களுக்கு சுகயீனம் ஏற்படும் போது அதற்காக மருத்துவரிடம் செல்லுவீர்கள். அப்போது மருத்துவரால் Medical Certificate வழங்கப்படும்.
அந்த Medical Certificateயை கம்பனியில் கொடுத்த பின்னர் எத்தனை நாட்கள் சுகயீனமாக இருந்திருக்கிறீர்களோ அந்த நாட்களுக்குறிய அடிப்படை சம்பளத்தை கம்பனி உங்களுக்கு கொடுக்க வேண்டும்.
மேலும், நம்மில் பெரும்பாலானவர்கள் சிங்கப்பூர் வரும் போது லட்சக்கணக்கில் பணம் கட்டியே வந்திருப்போம். இங்கே அந்த பணத்தில் கம்பனிக்கு எதுவும் செல்லாது.
மனிதவள அமைச்சின் விதிமுறைகளின் படி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் போது எந்தவித பணமும் வசூலிக்க கூடாது.
உங்களுக்கான IP, SOC, Medical, Levy, Renewal போன்றவற்றிற்கான செலவை கம்பனியே பொருப்பெடுக்க வேண்டும். மேலும், இதற்காக உங்களிடம் பணம் அறவிடவே கூடாது. நீங்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் Agentக்கே செல்லும்.
ஊழியர்களுக்கு என மனிதவள அமைச்சு வரையறுத்த Medical Insurance ஐ கம்பனிகள் பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வேலைத்தளத்தில் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தலை கம்பனி ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும்.
சிங்கப்பூருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு என வேலைக்கு வருவோம். அதாவது ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் என Permit இருக்கும். இந்த காலப்பகுதி முடிந்த பின்னர் உங்களுடைய நாட்டிற்கு செல்லும் போது அதற்கான Ticket செலவை கம்பனிதான் தர வேண்டும்.
அத்துடன், ஊழியர்களை கம்பனி Overtime வேலை பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும், Overtime பார்த்தால் அதற்குறிய சம்பளத்தை அடிப்படை சம்பளத்தை விட 1.5 மடங்குக்கு மேல் தர வேண்டும்.
Overtimeக்கான விதிமுறை போலதான் பொது விடுமுறைக்கான விதிமுறையாகும். அதாவது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச பொது விடுமுறை நாட்களில் உங்களை வேலைக்கு கட்டாயம் அமர்த்தக்கூடாது.
இந்த நாட்களில் வேலை செய்தால் அடிப்படை சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் தர வேண்டும்.
இந்த விதிமுறைகளை கம்பனிகள் மீறும் பட்சத்தில் மனிதவள அமைச்சகத்தில் புகாரளிக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது. எனவே மேற்கூறப்பட்ட விதிமுறைகளை கம்பனிகள் மீறுமாக இருந்தால் அவற்றை மனிதவள அமைச்சின் வலைத்தளத்திலோ அல்லது நேரடியாகவோ புகாரளிக்கலாம்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் Overtime வேலைக்கு எவ்வளவு தருகிறார்கள்? எப்படி கணக்கிடப்படுகிறது? எவ்வளவு கொடுக்க வேண்டும்!
- சிங்கப்பூரில் குறைந்த சம்பளத்தில் உள்ள நீங்கள் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இதை முழுமையாக செய்யுங்கள்!
- தற்போது சிங்கப்பூர் செல்ல எந்தெந்த Institute களில் Skill Test அடிப்பது சிறந்தது! பட்டியல் இதோ!
- இந்திய Driving Licenceயை வைத்து சிங்கப்பூர் Licenceயை எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?
- சிங்கப்பூரில் Shipyard, PCM இலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!