Friday, November 8, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள்! சம்பளம், DRC மாற்றங்கள்!

சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள்! சம்பளம், DRC மாற்றங்கள்!

சிங்கப்பூரில் வருடத்திற்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.

அந்த வகையில், தற்போது 2024 க்கான புதிய விதிமுறைகள் சிங்கப்பூர் அரசினால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறை அறிமுகத்தினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்மையா அல்லது தீமையா என கேட்டால் அதில் நன்மையும் உள்ளது, அதே போன்று தீமையும் உள்ளது.

சிங்கப்பூர் அரசினால் பல்வேறு பாஸ்களுக்கு பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

E Pass இல் Finance, Service Sectors களுக்கு அடிப்படை சம்பளத் தொகையானது அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள SGD $5500 ஆனது, SGD $6200 ஆக உயர்த்தப்படுகிறது.

மேலும், E Pass இல் Finance, Service அல்லாத ஏனைய Sectors களுக்கு அடிப்படை சம்பளத் தொகையானது SGD $5000 இல் இருந்து SGD $5600 ஆக அதிகரிக்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வரும் பாஸ்களுக்கான சம்பளத் தொகையைப் பார்க்க EPass க்கு அதிகமான சம்பளமே வழங்கப்படுகிறது.

சம்பள அதிகரிப்பானது ஊழியர்களுக்கு நன்மை தரும் விடயமாக இருந்தாலும் Levy தொகையின் அதிகரிப்பானது சிங்கப்பூர் கம்பனிகளுக்கு ஒரு சவாலாகவே இருக்கும்.

Levy தொகை என்பது, சிங்கப்பூரில் எடுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக கம்பனிகளால் சிங்கப்பூர் அரசுக்கு செலுத்தப்படும் பணமாகும். இது நாட்களின் அடிப்படையிலோ, மாதாந்திரமோ செலுத்தப்படும்.

அந்த வகையில், R2 Work Permit Basic Skill Workers களுக்கான Levy தொகையானது SGD $400 இல் இருந்து SGD $500 ஆக அதிகரிக்கப்படுகிறது.

மேலும், R1 Work Permit High Skill Workers களுக்கான Levy தொகையானது SGD $300 இல் இருந்து SGD $350 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

Work Permit க்கான DRC ஆனது 77.8% இலிருந்து 75% ஆக குறைக்கப்படுகிறது. 

அதேபோன்று, Shipyard Permit க்கு ஏற்கனவே 3.5 வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு உள்ளூர் சிங்கப்பூர் ஊழியரை வேலைக்கு அமர்த்த முடியும் என இருந்தது. 

ஆனால் தற்போது 3.5 இல் இருந்து 3 ஆக குறைக்கப்படுகிறது. 2026 ஜனவரி 1ம் தேதிக்குப் பின்னர் இந்த விதிமுறையானது நடைமுறைப்படுத்தப்படும்.

எனவே, 3 வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு உள்ளூர் ஊழியர் எனும் விகிதத்தில் Shipyard Permit க்கான DRC அமைகிறது.

இந்த புதிய விதிமுறைக்குள் வர தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும் நிறுவனங்களைப் பற்றி அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. 

எனவே, 2026 ஜனவரி 1 தேதிக்கு முன்பே வழங்கப்பட்ட வேலை அனுமதிகளை (WPH மற்றும் S Pass) கொண்ட வெளிநாட்டு ஊழியர்களைத் தொடர்ந்து பணியில் வைத்துக் கொள்ளலாம். 

மேலும், அந்த அனுமதிகள் காலாவதியாகும் வரை இது அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments