Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? முதலில் ஏஜென்சி நம்பகமானது தானா என்று தெரியணுமா?

சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கிறீர்களா? முதலில் ஏஜென்சி நம்பகமானது தானா என்று தெரியணுமா?

சிங்கப்பூரில் வேலை தேடுவதற்கு வேலைவாய்ப்பு முகவர்களின் உதவி இல்லாமல் கடினமாக இருக்கலாம். Indeed, Job Street போன்ற இணையதளங்கள் மூலமாக சிங்கப்பூர் வேலைகளை எளிதாகத் தேட முடிந்தாலும், அதிகமானோர் இன்னும் ஏஜண்டை தான் நம்பி இருக்கிறார்கள்.

ஆனால், வாழ்க்கையின் பிற பகுதிகளைப் போலவே, சிங்கப்பூரில் உண்மையான மற்றும் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளன.

போலி வேலைகளை அடையாளம் காண்பது தான் சவாலான விஷயம். சில சமயங்களில், இந்த போலி முகவர்கள் வேலை உறுதி என்று கூறிக்கொண்டு 8,000 தொடக்கம் 10,000 டாலர் வரை முன்பணம் கேட்பார்கள்.

நீங்கள் பணம் செலுத்திய பிறகு, அவர்கள் எந்த பதிலும் தராமல் சாக்குபோக்கு சொல்லி மாதக்கணக்கில் காக்க வைக்கலாம். இப்படி பல பேரிடம் செய்தாலே ஏமாற்று வேலை செய்தாலே எளிதாக சம்பாதித்துவிடுகிறார்கள். ஏமாற்று வேலை எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதை இது காட்டுகிறது.

இந்த முகவர்களின் உண்மையானவர்களா அல்லது போலியானவர்களா என்பதைச் சரிபார்க்க ஒரு வழி இருக்கிறது.

இந்த இணைய இணைப்பில், வெளிநாட்டு தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சிங்கப்பூரில் நிரந்தர வதிவிடத்தை வழங்க உதவும் முகவர்களை நீங்கள் பார்க்கலாம்.

அவர்களின் வாடிக்கையாளர் மதிப்பீடுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முகவர்களை அலசி ஆராயலாம்.

தேடல் பட்டியலில் இருந்து ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அவர்கள் எத்தனை பேருக்கு வெற்றிகரமாக வேலை வாங்கிக்கொடுத்துள்ளார்கள், பணம் திரும்பப் பெறுதல் அல்லது தக்கவைப்பு, அவர்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் முகவரி போன்ற விரிவான தகவல்களைப் பார்க்க முடியும். வீட்டுப் பணிப்பெண்ணை தேர்வு செய்யும் நிறுவனங்களையும் இதே முறையில் தேடலாம்.

ஏமாற்றும் வேலைகளில் சிக்காமல் இருக்க, மனிதவள அமைச்சகம் (MOM) அறிவுறுத்தியபடி, Revocation, Suspension, Surveillance பட்டியலின் கீழ் உள்ள நிறுவனங்களைத் தவிர்க்கவும். அத்துடன், நிறுவனத்தின் அனுபவத்தையும் கவனியுங்கள்.

அவர்கள் நீண்ட காலமாக இருந்தால், அவர்கள் நம்பகமானவர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். சிங்கப்பூர் அரசாங்க விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் demerit points வைத்திருக்கலாம், எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

நிறுவனங்களின் விரிவான பட்டியல் மற்றும் அவற்றின் விவரங்களை இந்த இணைப்பில் பெறலாம். தேடல் அம்சத்தைப் பயன்படுத்தி, நீங்கள் குறிப்பிட்ட வகை நிறுவனங்களைத் தேடலாம், மேலும் அவற்றைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பெறலாம்.

போலி ஏஜென்ஸியிடமிருந்து தப்பிப்பத்தற்கு நீங்கள் கீழ்வரும் முறையைப் பின்பற்றுங்கள்.

ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை எதிர்கொள்ளும் போது, தெளிவு என்பது மிக முக்கியம். நீங்கள் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களின் விவரங்களையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இதில், முகவரின் கமிஷன் தொகை, பயண மற்றும் நிர்வாகச் செலவுகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

ஒப்பந்தத்தை முழுமையாகப் படிப்பதும் அவசியம். குறிப்பாக, விதிமுறைகளில் கவனம் செலுத்துங்கள். இதில் உங்கள் உரிமைகள், முகவரின் கடமைகள் மற்றும் ரத்து செய்வதற்கான விதிகள் ஆகியவை அடங்கும்.

ஒப்பந்தத்தில் ஏதேனும் தெளிவற்ற பகுதிகள் இருந்தால், கையெழுத்திடுவதற்கு முன் சட்ட ஆலோசனையை நாடுவது நல்லது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments