2024 இல் சிங்கப்பூருக்கு வேலைக்காக வருகை தரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வெளிநாட்டு ஊழியர்கள் பல்வேறு சிங்கப்பூர் Pass, Permit களின் ஊடாக வருகை தருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் Work Permit, S Pass, EPass, PCM, Shipyard என பிரபலமான Pass களின் ஊடாக சிங்கப்பூருக்கு வருகிறார்கள்.
சிங்கப்பூரில் S Pass என்பது மிக முக்கியமான Pass ஆக கருதப்படுகிறது. காரணம், அதற்கு வழங்கப்படுகின்ற சம்பளம் தான் ஆகும்.
ஆனால், 2024யில், S Pass இனூடாக வருகை தரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லுகிறது.
காரணம் என்னவென்றால், சிங்கப்பூர் அரசு வரையறுத்திருக்கும் Quota முறையாகும்.
S Pass Quota என்பது ஒரு S Pass வேலைக்கு எத்தனை நபர்கள் எடுக்கப்படுகிறார்களோ அதில் உள்ள சிங்கப்பூரை பிறப்பிடமாக கொண்ட நிரந்தர ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையிலான விகிதம் ஆகும்.
உதாரணமாக, S Pass வேலைக்கு 100 பேர் எடுக்கப்போகிறார்கள் எனின், அந்த வேலைக்கு மனிதவள அமைச்சு ஒரு S Pass Quota வைத்திருக்கும். உதாரணமாக, 60% எனில், மொத்தமாக 100 பேர் அந்த வேலைக்கு எடுக்கப்படும் போது அதில் 60 பேர் வெளிநாட்டு ஊழியர்களாகவும் 40 பேர் உள்நாட்டு ஊழியர்களாகவும் காணப்படுவார்கள்.
இது போன்றே, மனிதவள அமைச்சு தற்போது ஒவ்வொரு வேலைக்கும் என Quota வரம்புகள் வைத்துள்ளது.
கட்டுமானம், Process துறைகளுக்கு 83.3% உம், Marine shipyard துறைக்கு 77.8% உம், Manufacturing துறைக்கு 60% உம் Services துறைக்கு 35% உம் என Quota வரைமுறைகள் காணப்படுகிறன.
கட்டுமானம், Marine shipyard, Process போன்ற துறைகளுக்கு S Pass இன் ஊடாக வரக்கூடிய வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றைய துறைகளுடன் பார்க்க அதிகம் என்றே சொல்லலாம்.
இந்த வரைமுறைகள் காரணமாக, S Pass இல் வருகைதரும் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது முன்னைய நாட்களைப் பார்க்க குறைவடைந்துள்ளது.
ஆனால், இந்த S Pass Quota வரம்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படும் எனவும், மேலும், புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் பரவலாக பேசப்படுகிறது.
தற்போது சிங்கப்பூரில் S Pass க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என பார்த்தால், புதிய விண்ணப்பங்கள் எனின், Financial Sector க்கு SGD $3,650 கொடுக்கப்படுகிறது.
அதே போன்று Financial Sector தவிர்த்து ஏனைய Sectorகளுக்கு SGD $3,150 உம் கொடுக்கப்படுகிறது. மேலும், Renewals க்கு SGD $3,000 ஆகும்.
கம்பனி Levy கட்டும் தொகையானது, Tier 1 க்கு மாதாந்தம் SGD $550 உம் Tier 2 இற்கு SGD $650 ஆகும்.
S Pass Levy என்பது S Passயில் வேலைக்கு உள்ளாக்கப்படும் ஒவ்வொரு S Pass ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் கம்பனி முதளாலிகளால் சிங்கப்பூர் அரசுக்கு செலுத்தப்படும் பணம் ஆகும்.
மேலும், சிங்கப்பூருக்கு குடும்பத்தாருடன் வர வேண்டுமாயின், மாதாந்த சம்பளம் SGD $6000 வரை இருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
ஆனால், ஊழியர்களின் பரவலான கருத்து என்னவெனில், S Passக்கு வழங்கப்படும் சம்பளமானது சிங்கப்பூர் அரசினால் வரையறுக்கப்பட்ட தொகையைப் பார்க்க குறைவாகவே வழங்கப்படுகிறது என ஒரு பரவலான கருத்து நிலவி வருகிறது.
மேலும், S Pass இனூடாக வருவது கடினம் எனின் அதற்கு மாற்றீடாக பல பாஸ்கள் உள்ளன. உதாரணமாக, NTS Permit, TWP Pass போன்ற பாஸ்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.
உங்களுக்கு பொருத்தமான Passயினை தெரிவு செய்து சிங்கப்பூர் வருவது சிறந்தது.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் வேலைக்கு ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைகொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்கள் கைக்கு கிடைக்கிறது
- சிங்கப்பூருக்கு ஜூனில் செல்லும் போது Pass, Permit களுக்கு எடுத்துச்செல்ல தேவையான முக்கியமான டாக்குமெண்ட்ஸ் என்னென்ன?
- NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? தற்போது S Passயில் யாருக்கு, என்னன்னெ வேலைகள் உள்ளன!
- சிங்கப்பூரில் Electrical, Excavator Operator வேலைகள் எப்படி இருக்கிறது? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
- Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்!!