Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் 2024 இல் என்னென்ன Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம்...

சிங்கப்பூரில் 2024 இல் என்னென்ன Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம் இதோ!

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு பலவிதமான சிங்கப்பூர் Pass மற்றும் Permitகளின் ஊடாக வேலைக்கு வருகிறனர்.

அவர்களுடைய Experience, Skills, மற்றும் அவர்கள் வருகைதரும் Pass இன் அடிப்படையில் அவர்களுக்கான சம்பளமானது வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்களுடைய Experience, Skills என்பன அதிகரிக்கப்படும் போது அவர்களுக்கான சம்பளமும் அதிகரிக்கும்.

அந்தவகையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு என்னென்ன Pass, Permit களுக்கு சிங்கப்பூரில் எவ்வளவு சம்பளம் பெற முடியும் என இப்போது பார்ப்போம்.

சிங்கப்பூருக்கு நீங்கள் EPass, S Pass, NTS Permit, Shipyard Permit, PCM Permit, EntrePass, Work Permit, ONE Pass போன்ற பல்வேறு Passகளின் ஊடாக வர முடியும்.

வெவ்வேறு Passகள் திறமை, கல்வித்தகைமை, அனுபவம் அடிப்படையில் உங்களுக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் S Passயில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. அவை Financial Services Sector உம் General Sector உம் ஆகும். 

Financial Services Sector இல் மாதாந்தம் $3,650 SGD அடிப்படை சம்பளமாக சிங்கப்பூரில் வழங்கப்படுகிறது.

மேலும், General Sector இல் மாதாந்தம் $3,150 SGD உம் சம்பளமாக சிங்கப்பூரில் வழங்கப்படுகிறது.

EPassயிலும் S Pass போன்றே இரண்டு பிரிவுகள் உள்ளன. அவையும் Financial Services Sector உம் General Sector உம் ஆகும்.

Financial Services Sector இல் மாதாந்தம் $5,500 SGD உம் General Sector இல் மாதாந்தம் $5,000 SGD உம் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில், EPass இற்கு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் சம்பள உயர்வடையவுள்ளது. அந்தவகையில், Financial Services Sector பணிபுரிபவர்களுக்கு மாதத்திற்கு $6,200 SGD உம் General Sector இல் பணிபுரிபவர்களுக்கு மாதத்திற்கு $5,600 SGD உம் வழங்கப்படவுள்ளது.

NTS Permit இல் சிங்கப்பூர் வருபவர்களுக்கு மாதாந்த சம்பளமாக $2,000 SGD வழங்கப்படுகிறது. S Pass Quota கிடைக்காத அதிகமானவர்கள் NTS Permitயினூடாக சிங்கப்பூர் வேலைக்கு வருகிறார்கள்.

Shipyard (கப்பல் கட்டும் தளம்) Permit க்கான சம்பளமாக $1,200 SGD வரை வழங்கப்படுகிறது. Shipyard Permit இல் Overtime உம் வழங்கப்படுகிறது. Overtimeக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்படும்.

Skill Test அடித்து கட்டுமான வேலைகளுக்கு வருபவர்களுக்கு $800 SGD முதல் $1,500 SGD வரை வழங்கப்படுகிறது. Skill Testயில் அனுபவம் கூட சம்பள உயர்வும் வழங்கப்படும்.

மேலும், Process, PCM இல் சிங்கப்பூர் வருபவர்களுக்கு $500 SGD முதல் $1,500 SGD சம்பளமாக வரை வழங்கப்படுகிறது.

PCM, Shipyard, Work Permit களுக்கு நாளாந்தம் அல்லது மாதாந்தம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இது கம்பனிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

அதிகமான வேலைகளுக்கு Overtime வழங்கப்படுகிறது. எனவே, Overtime செய்வதன் மூலம் அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக பெற முடியும்.

அத்துடன், சிங்கப்பூரில் அடிப்படை சம்பளமாக குறிப்பிடப்படும் தொகையை விட குறைவாகத்தான் வழங்கப்படுகிறது என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.

மேலும், சிங்கப்பூரில் செலவுகளும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே, செலவு மற்றும் சம்பளத்தைக் கருத்திற்கொண்டு பொருத்தமான வேலைக்கு சிங்கப்பூர் வருவது சிறந்தது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments