சிங்கப்பூருக்கு வேலைக்கு S Passயில் செல்ல வேண்டும் என அதிகமானோர் விருப்பப்படுவார்கள்.
ஆனால், எல்லோராலும் S Passயில் செல்ல முடியாது. காரணம், S Passக்கு என குறிப்பிட்ட Quotaவில் தான் வேலைக்கு எடுப்பார்கள். எனவே, S Pass கிடைக்காதவர்கள் வேறு Passகளின் ஊடாக சிங்கப்பூருக்கு செல்ல முடியும்.
ஆனால், சிங்கப்பூரில் S Passக்கு மனிதவள அமைச்சகம்(MOM) வரையறுத்த சம்பளமானது ஆரம்பத்தில் கொடுக்கப்படாது.
அதாவது, S Passக்கான சம்பளமானது SGD $3,000க்கு மேலாகும். ஆனால், ஆரம்பத்தில் குறைவான சம்பளமே கிடைக்கப்பெறும்.
Work Permitயில் செல்லுபவர்களும் கூட S Passயில் கிடைக்கும் சம்பளம் வாங்க முடியும். எப்படி எனின், Work Permitயில் இருப்பவர்கள் சிங்கப்பூரில் தேவையான Courseகளை செய்து தங்களுடைய Skillsயை வளர்த்து அதிகமான சம்பளம் வாங்க முடியும்.
சிங்கப்பூரில் S Pass எடுப்பதற்கான Process எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
நன்றாக படித்திருந்தால் S Pass என்பது வாங்க முடியும். S Passயிற்கு Degree, Msc செய்தவர்கள் செல்ல முடியும்.
சிங்கப்பூரில் வேலை தேடும் Websiteகளின் ஊடாக சிலர் முயற்சி செய்து S Passயிற்கு செல்லுவார்கள். ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமாகாது.
பெரும்பாலானோர் S Passயில் செல்ல வேண்டும் எனின், அவர்கள் நாடுவது Agentயைத்தான்.
Agent ஊடாக சிங்கப்பூர் செல்ல முயற்சி செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிங்கப்பூர் செல்ல உங்களது Documentsயை அவர்கள் ஆரம்பத்தில் பெற்று அதனை சிங்கப்பூரில் உள்ள Agentக்கு அனுப்பி அதன் மூலமாக வேலையை Ready பன்னுவார்கள்.
பின்னர் Companyயின் Requirementsயை அனுப்புவார்கள். அதில், உங்களுடைய Document ஒத்துப்போகும் எனின், அந்த வேலைக்காக நீங்கள் செல்லலாம்.
இங்குதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் அதிகமான பணம் கொடுக்கவே கூடாது.
ஏனெனில், தற்போது அதிகமான Scammers இந்த வேலையை செய்கிறார்கள். உங்களிடம் இருந்து எப்படியாவது பணத்தைப் பெற்றுக்கொள்ளுவதே அவர்களின் ஒரே நோக்கமாகும்.
Scammers கூட Company இன் Requirement மாதிரி Ready பன்னி உங்களிடம் தர முடியும். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது சிங்கப்பூருக்கு S Passயில் செல்ல Agent 4 முதல் 8 லட்சங்கள் வரை பணமாக வாங்குகிறார்கள்.
ஆரம்பத்தில் Passport கேட்டால் கொடுக்க வேண்டாம். ஏனெனில், அதை வாங்கிக்கொண்டு ஏதேனும் Register பன்னுகிறோம் என கூறி பணத்தை உங்களிடம் வசூலிக்க பார்ப்பார்கள்.
அத்துடன், விளம்பரங்களில் பார்த்து பணத்தை கொடுத்து ஏமார்ந்திட வேண்டாம்.
முறையாக Agent செயற்படுகிறார்கள் எனின், உங்களுடைய Document சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு உங்களுக்கு Interview நடைபெறும்.
பின்னர், வேலைக்காக மனிதவள அமைச்சில் உங்களுக்கு Apply பன்னுவார்கள். Agent உண்மையாக செயற்படுகிறார்கள் எனின், மனிதவள அமைச்சின் Website இல் உங்களது Passport ஐக் கொடுத்து Apply செய்ததன் Statusயை Check பன்ன முடியும்.
3 வாரத்தினுள்ளேயே அதற்கான Result வந்துவிடும். அதிகபட்சமாக 4 முதல் 6 வாரம் எடுக்கும்.
Result Pass ஆகி வந்ததுடன் IP வந்துவிடும். IP உங்களது கைகளுக்கு வந்து அதை முழுமையாக படித்த பின்னர் அதில் உள்ள சந்தேகங்களை Agentயிடம் கேட்டு தெளிவு பெறும் வரை Agentக்கு அதிகமான பணத்தைக்கொடுத்து விடாதீர்காள்.
IP வந்த பின்னர் Agentக்கான பணத்தை கட்டிய பின்னர் சிங்கப்பூருக்கு செல்ல முடியும். இவ்வாறு தான் S Passக்கான Process நடைபெறுகிறது.
ஆனால் 2024யில், S Passக்கான Quota வரையறையினால் S Passயினூடாக சிங்கப்பூர் செல்லுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, பணத்தை கட்ட முதல் தெளிவாக விசாரித்துக்கொள்ளுங்கள்.
S Passயில் சிங்கப்பூரில் வேலை செய்ய ஒரு வருடம் போடப்பட்டிருக்கும். நீங்கள் மேலும் வேலை செய்ய வேண்டும் எனின், S Passயை Renew செய்ய முடியும். அல்லது, வேறு கம்பனியில் சென்று வேலை செய்ய முடியும்.
தற்போது, இந்த S Pass வேலைக்கு Offer Letter எனும் Scam உம் வந்திருக்கிறது. ஒரு நம்பகமான கம்பனி போல் Offer Letter கொடுத்து ஏமாற்று வேலை நடக்கிறது.
எனவே, இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டு. எல்லாவற்றையும் தீர விசாரித்து முடிவெடுப்பது சிறந்தது.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் Overtime வேலைக்கு எவ்வளவு தருகிறார்கள்? எப்படி கணக்கிடப்படுகிறது? எவ்வளவு கொடுக்க வேண்டும்!
- சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம், Overtime, விடுமுறை தொடர்பாக கம்பனிகளுக்கு MOM இன் புதிய விதிமுறைகள்!
- சிங்கப்பூரில் தற்போது Safety Supervisor வேலை, Course எப்படி இருக்கு? எவ்வளவு செலவாகும்? சம்பளம் எவ்வளவு?
- இந்திய Driving Licenceயை வைத்து சிங்கப்பூர் Licenceயை எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?
- சிங்கப்பூரில் Shipyard, PCM இலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!