Saturday, December 7, 2024
Homeசிங்கப்பூர்2024 இல் சிங்கப்பூரில் எந்தெந்த Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம்!

2024 இல் சிங்கப்பூரில் எந்தெந்த Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம்!

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு பல்வேறு Pass, Permit இன் ஊடாக சிங்கப்பூரில் வேலைக்கு வருகிறனர்.

அவர்களுடைய Skills, Experience, Pass இன் அடிப்படையில் சம்பளம் ஆனது வழங்கப்படும்.

Experience, Skills என்பன அதிகரிக்கப்படும் போது சம்பளமும் அதிகரிக்கிறது.

அந்தவகையில், என்னென்ன Pass, Permit களுக்கு எவ்வளவு சம்பளம் சிங்கப்பூரில் பெற முடியும் என விவரமாக பார்ப்போம்.

சிங்கப்பூருக்கு நீங்கள் S Pass, EPass, NTS Permit, Shipyard Permit, PCM Permit, EntrePass, Work Permit போன்ற வித்தியாசமான Pass களின் ஊடாக வர முடியும்.

ஒவ்வொரு Pass களும் திறமை, கல்வித்தகைமை, அனுபவம் அடிப்படையில் உங்களுக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் S Pass இரண்டு பிரிவுகள் உள்ளன. அவையாவன Financial Services Sector மற்றும் General Sector ஆகும். 

Financial Services Sector இல் மாதத்திற்கு $3,650 SGD அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது.

அத்துடன், General Sector இல் மாதத்திற்கு $3,150 SGD அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது.

EPass இலும் S Pass போன்றே இரண்டு பிரிவுகள் உள்ளன. அவையாவன Financial Services Sector மற்றும் General Sector ஆகும். 

Financial Services Sector இல் மாதத்திற்கு $5,500 SGD உம் General Sector இல் மாதத்திற்கு $5,000 SGD உம் வழங்கப்படுகிறது.

EPass இல் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் சம்பள உயர்வடையவுள்ளது. அந்தவகையில், Financial Services Sector இல் மாதத்திற்கு $6,200 SGD உம் General Sector இல் மாதத்திற்கு $5,600 SGD உம் வழங்கப்படவுள்ளது.

NTS Permit இல் வருவோருக்கு மாதாந்த சம்பளமாக $2,000 SGD வழங்கப்படுகிறது. S Pass Quota கிடைக்காதவர்கள் NTS Permit இனூடாக சிங்கப்பூர் வருகை தருகிறனர். 

Shipyard Permit க்கான சம்பளமாக $1,200 SGD வரை வழங்கப்படுகிறது. Shipyard Permit இல் Overtime உம் வழங்கப்படுகிறது.

Skill Test அடித்து கட்டுமான வேலைகளுக்கு வருபவர்களுக்கு $800 SGD முதல் $1,500 SGD வரை வழங்கப்படுகிறது.

அதே போன்று Process, PCM இல் வருபவர்களுக்கு $500 SGD முதல் $1,500 SGD வரை வழங்கப்படுகிறது.

PCM, Shipyard, Work Permit களுக்கு நாளாந்தம் அல்லது மாதாந்தம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இது கம்பனிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments