Wednesday, October 30, 2024
Homeசிங்கப்பூர்தமிழ்நாட்டில் Skill Test அடிக்க Institute கள் Open இல் உள்ளன! ஆனால் Test அடிக்கலாமா?

தமிழ்நாட்டில் Skill Test அடிக்க Institute கள் Open இல் உள்ளன! ஆனால் Test அடிக்கலாமா?

சிங்கப்பூருக்கு வேலைக்காக பல்வேறு வழிகளில் வருகிறனர். அதில் முக்கியமான ஒன்றுதான் Test அடித்து வருவதாகும்.

சில காலங்களுக்கு முன்னர் பார்ப்போமேயானால் அதிகமானோர் Skill Test அடித்தே சிங்கப்பூர் வந்தனர்.

ஏனெனில், Test அடித்து வருபவர்களுக்கு சம்பளமானது சற்று அதிகமாகவே கிடைத்தது.

ஆனால், கொரோனாக்குப் பின்னரான காலப்பகுதிகளில் Test அடித்து வருபவர்களின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி காணப்படுகிறது.

ஏனென்றால், Test அடிக்கும் Institute களுக்கு கிடைக்கப்பெறும் Quota வின் அளவுதான் காரணமாகும்.

முன்னர், அதிகமானோர் Test அடித்துவிட்டு விரைவாக வந்து விடுவார்கள். ஆனால், தற்போது Quota வின் குறைவினால் அதிகமானோர் Test அடிக்க முடியாமல் உள்ளது.

அத்துடன் Institute களில் Test அடிக்க செல்லும் போது Main Test ஏறுவதற்கான காலப்பகுதியும் தற்போது அதிகமாகவே உள்ளது.

இது 10 தொடக்கம் 15 மாதங்கள் வரைக்கூட ஆகலாம். Main Test ஏறுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதிகமாக காத்திருக்க நேரிடுகிறது.

காத்திருப்பு காலம் அதிகமாக உள்ள காரணத்தினாலும், Quota குறைவினாலும் தற்போது அதிகமானோர் ஏனைய Permit, Pass களினூடாகவே சிங்கப்பூர் செல்ல முயற்சிக்கின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் சில Institute கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால், உள்ளாக்கப்படும் விகிதம் என்பது மிக மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இந்த Quota வரம்பானது அதிகரிக்குமா என கேட்டால் உறுதியாக சொல்ல முடியாது. முன்னர் போல் Quota ஆனது இருக்குமேயானால், இலகுவாகவும் விரைவாகவும் Test அடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றிட முடியும்.

சிலர் சிங்கப்பூர் சென்று Skill Test அடித்து விடுகிறனர். சிங்கப்பூர் சென்று Skill Test அடிப்பதன் மூலம் தமிழ்நாட்டைப் பார்க்க செலவு குறைவு.

அதேபோன்று, அதிகமான காலப்பகுதி காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. விரைவாகவே Test அடித்துவிட முடியும்.

ஆனால், தற்போது அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னவென்றால், சிங்கப்பூரில் Test அடிக்க வேண்டும் எனில் அதற்கு Company Letter கோரப்படுகிறது.

வெறுமனே சிங்கப்பூர் சென்று Skill Test அடிப்பது என்பது தற்போது சற்று கடினமாகவே மாறி வருகிறது.

Company Letter இருக்குமெனில் இலகுவாக Test அடித்து விட்டு வேலைக்கு மாறிவிட முடியும்.

இந்தியாவில் இருந்து Test அடித்து வர கடினமாக உள்ளவர்களுக்கு சிங்கப்பூர் அரசு சில புதுவகையான Permit களை அறிமுகம் செய்திருக்கிறது.

அந்த வகையான Permit களினூடாக சிங்கப்பூர் வருவது Test அடித்து வருவதைப் பார்க்க இலகுவானது.

ஆனால், சம்பளம் தான் சற்று குறைவாக கிடைக்கிறது. வேலைக்கு என்ன சம்பளம் என்பதை முழுமையாக கேட்டறிந்த பின்னர் சிங்கப்பூர் வருவது சிறந்தது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments