Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்2024 இல் S Pass க்கு வந்துள்ள Quota வழிமுறைகள்! சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது?

2024 இல் S Pass க்கு வந்துள்ள Quota வழிமுறைகள்! சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது?

2024 இல் சிங்கப்பூருக்கு வருகை தரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஊழியர்கள் பல்வேறு Pass, Permit களின் ஊடாக சிங்கப்பூர் வருகின்றனர். S Pass, EPass, Work Permit, CPM, Shipyard என பிரபலமான Pass களின் ஊடாக வருகை தருகிறார்கள்.

அந்த வகையில் S Pass என்பது மிக முக்கியமான மற்றும் அதிக சம்பளம் பெறக்கூடிய ஒரு பாஸ் ஆகும்.

2024 ஐப் பொருத்தவகையில், S Pass இனூடாக வருகை தரும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைந்து தான் செல்லுகிறது.

அதற்கான காரணம் என்னவெனில், சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்திய Quota முறைதான். 

Quota என்பது ஒரு குறிப்பிட்ட வேலைக்கு எத்தனை நபர்கள் எடுக்கப்படுகிறார்களோ அதில் உள்ள சிங்கப்பூர் வாழ் நிரந்தர ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையிலான விகிதம் தான்.

உதாரணமாக, ஒரு வேலைக்கு 100 பேர் எடுக்கப்போகிறார்கள் என வைத்துக்கொண்டால், அந்த வேலைக்கு மனிதவள அமைச்சு ஒரு Quota வைத்திருக்கும். உதாரணமாக, 60% எனில், மொத்தமாக 100 பேர் அந்த வேலைக்கு எடுக்கப்படுவார்கள் எனின் அதில் 60 பேர் வெளிநாட்டு ஊழியர்களும் 40 பேர் உள்நாட்டு ஊழியர்களுமாக அடங்குவர்.

அந்த வகையில் மனிதவள அமைச்சு தற்போது ஒவ்வொரு வேலைக்கும் என Quota வரம்புகள் வைத்துள்ளன. 

Construction, Process துறைகளுக்கு 83.3%, Marine shipyard துறைக்கு 77.8%, Manufacturing துறைக்கு 60% உம் Services துறைக்கு 35% உம் என Quota வரம்புகள் வைக்கப்பட்டுள்ளன.

Construction, Process, Marine shipyard போன்ற துறைகளுக்கு S Pass இன் ஊடாக வரக்கூடிய எண்ணிக்கை மற்றைய துறைகளுடன் ஒப்பிடும் போது அதிகம் என்றே சொல்லலாம்.

இந்த வரம்புகளின் காரணமாகவே, S Pass இல் வருகைதரும் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளது.

இப்போது S Pass க்கு எவ்வளவு சம்பளம் என பார்த்தால், புதிய Applications எனின், Financial sector க்கு SGD $3,650 கொடுக்கப்படுகிறது.

அதே போன்று ஏனைய sector களுக்கு SGD $3,150 உம் கொடுக்கப்படுகிறது. மேலும், Renewals க்கு SGD $3,000 ஆகும். 

Levy கட்டும் தொகையைப் பார்ப்போமேயானால், Tier 1 க்கு மாதாந்தம் SGD $550 உம் Tier 2 இற்கு SGD $650 ஆகும்.

S Pass Levy என்பது எடுக்கப்படும் ஒவ்வொரு S Pass holders க்கும் முதளாலிகளால் சிங்கப்பூர் அரசுக்கு செலுத்தப்படும் பணம் ஆகும்.

அத்தோடு, சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் வர வேண்டுமானால், மாதாந்த சம்பளம் SGD $6000 வரை இருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. 

S Pass இனூடாக வருவது கடினம் எனின் அதற்கு மாற்றீடாக பல பாஸ்கள் உள்ளன. உதாரணமாக, NTS Permit, TWP Pass போன்றவையாகும்.

சிங்கப்பூருக்கு விரைவாகவும் இலகுவாகவும் அத்துடன் நல்ல சம்பளம் தரக்கூடிய Pass ஐத் தெரிவு செய்து வருகை தருவது சிறந்தது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments