சிங்கப்பூருக்கு வேலைக்காக வெளிநாட்டிலிருந்து வருபவர்களாயின் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாஸினூடாகவே வர வேண்டும்.
இந்த வகையில், PSA என்பது சிங்கப்பூருக்கு அதிகளவான தொழிலாளர்கள் வருகின்ற ஒரு முக்கியமான Pass ஆகும்.
2024யிலே PSA பாஸினூடாக வேலைக்கு வருபவர்களுக்கு என்ன சம்பளம், வேலை எப்படி இருக்கும், மற்றும் எந்தெந்த வேலைகள் ஊழியர்களுக்கு உள்ளன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
முதலிலே, PSA என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். PSA என்பதன் விரிவாக்கம் Port of Singapore Authority ஆகும். அதாவது, PSA என்று சொல்லும் போது கப்பல் மற்றும் துறைமுக தளங்களில் வேலைகள் காணப்படும்.
PSA இல் என்னன்ன வேலைகள் உள்ளதென பார்த்தால் குறிப்பாக டிரைவர் வேலை, லேஷிங் வேலை, Container தொடர்பான வேலைகள், கப்பல் சம்பந்தமான வேலைகள் என இன்னும் பல்வேறு வேலைகள் உள்ளன.
PSA இல் முக்கியமான வேலைகளாக டிரைவிங் மற்றும் லேஷிங் வேலைகள் காணப்படுகிறன.
நீங்கள் ஏனைய பாஸ்களின் ஊடாக சிங்கப்பூர் வந்து ஓட்டுனராக வேண்டும் எனின், அதற்கு நீங்கள் சிங்கப்பூர் Driving Licence எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், சிங்கப்பூர் Driving Licence எடுப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல, இதற்கு ஒன்று முதல் இரண்டு லட்சங்கள் வரை செலவாகும்.
இருந்தும், நீங்கள் உங்களது நாட்டில் ஏற்கனவே வாகன ஓட்டுனராக இருந்தால், ஏற்கனவே கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருப்பின் நீங்கள் PSAயிலே நேரடியாக டிரைவர் ஆகவே செல்ல முடியும்.
அத்துடன், PSA லேஷிங் வோர்க் என்பது என்னெவெனின் கப்பலில் அதிகளவிலான கண்டைனர்ஸ் (Containers) ஏற்றும் போது அவை கீழே விழாதவாறு கம்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி இறுக்கம் பன்னுவது, அதே போன்று கண்டைனர்ஸ் இறக்கும் போது கம்பிகளை தளர்த்தி கண்டைனர்ஸை இறக்குவது தொடர்பான வேலை ஆகும்.
PSA இல் ஏராளமான வேலைகள் இருப்பினும் டிரைவிங் மற்றும் லேஷிங் வேலைக்கு அதிகமாக ஆட்கள் எடுப்பார்கள்.
PSA வேலைகளுக்கு சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கப்பெறும். சிங்கப்பூரில் செலவுகள் போக மிகுதி நாற்பது தொடக்கம் ஐம்பத்தைந்தாயிரம் வரை நாட்டிற்கு அனுப்பக்கூடியவாறு இருக்கும்.
PSA வேலையில் Overtime நிறையவே இருக்கும். இங்கே, Overtime செய்து அதிகமாகவும் சம்பாதிக்க முடியும்.
PSA வேலைகள் ஒவ்வொரு வருடமும் வருகிறது எனின், நேரடியாக தமிழ் நாட்டில் இருந்து ஆட்கள் எடுப்பார்கள். அத்துடன், நீங்கள் வேலைக்குச் செல்லும் முன் உங்களது வேலைக்குத் தேவையான டிரைனிங் கொடுக்கப்படும்.
இதற்கு நீங்கள் பணம் செலுத்தி டிரைனிங்கில் கலந்து கொள்ளும் விதமாக அமையும்.
PSA வேலைகளுக்கு தமிழ் நாட்டில் இருந்து ஆயிரம் பேருக்கு டிரைனிங் கொடுத்தால் அதில் திறமையான 300 தொடக்கம் 400 வரையான நபர்களை வேலைக்கு எடுப்பார்கள். மீதமுள்ளவர்கள் அடுத்தமுறை வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது முயற்சிக்கலாம்.
தவறும் பட்சத்தில், ஏஜண்டைப் பொருத்து உங்களிடம் வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுக்கின்றவர்களும் கொடுக்காத ஏஜன்ட்களும் இருக்கிறார்கள்.
முக்கியமாக கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், PSA வேலைகள் ஏனைய வேலைகளைப் பார்க்க சற்று கடினமாக அமையும். எனவே, இந்த வேலைகளுக்காக உங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு சென்றால் மட்டுமே உங்களால் நன்றாக வேலை செய்ய முடியும்.
மேலும், சில சமயம் PSA வேலைகள் உங்களுக்கு கடினமாக இருந்தால் சிங்கப்பூரில் வேறு வேலைகளுக்கு கூட முயற்சி செய்யலாம்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கரம் கொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்களுக்கு கிடைக்கிறது
- தற்போது சிங்கப்பூரில் Shipyard, PCMயிலிருந்து S Passக்கு மாறுவது எப்படி? என்னென்ன செய்ய வேண்டும்!
- சிங்கப்பூருக்கு Work Permitயில் சென்று மாதம் SGD $2,200 வரையில் சம்பளம் எப்படி வாங்குவது? என்ன செய்ய வேண்டும்!!
- இனி வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்ல RMI Certificate கட்டாயமா! யாரெல்லாம் எடுக்க வேண்டும்! எப்படி எடுப்பது?
- Skill Test அடிக்காமல் சிங்கப்பூரில் நல்ல சம்பளத்துடன் வேலைக்கு வர வேண்டுமா? PSA தான் இதற்கான பெஸ்ட் சாய்ஸ்