Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்2024 இல் சிங்கப்பூருக்கு செல்ல எந்தெந்த Pass, Permit Visaக்களுக்கு எவ்வளவு Approval காலம் எடுக்கும்?

2024 இல் சிங்கப்பூருக்கு செல்ல எந்தெந்த Pass, Permit Visaக்களுக்கு எவ்வளவு Approval காலம் எடுக்கும்?

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் முதல் Visa Approval என்பது மிக முக்கியமானது.

அதுவும், வேலைக்கு என வெளிநாடு செல்லும் போது பல்வேறுபட்ட Visa வகைகள் இருக்கின்றன.

எனவே நீங்கள் என்ன Pass, Permit இல் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்கிறீர்களோ அந்த Pass க்கு ஏற்றவாறு Approval க்கான நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

ஏஜன்ட் மூலமாகவோ அல்லது நீங்களாகவோ Visa க்கு Apply செய்யும் போது Visa Approve ஆகி விட்டதா என்பதை மனிதவள அமைச்சகத்தின் வெப்சைடில் Check பன்ன முடியும்.

சிங்கப்பூர் Visa க்களைப் பொருத்தவகையில் மனிதவள அமைச்சில் Approve ஆகுவதற்கு மணிநேரம் முதல் மாதங்கள் வரை ஆகலாம்.

அது நீங்கள் Apply செய்யும் Pass ஐ பொருத்து மாறுபடும்.

Work Permit க்கு Apply செய்கிறீர்கள் எனில், சில மணி நேரங்கள் முதல் 3 நாட்கள் வரை Approve ஆகுவதற்கு நேரம் எடுக்கலாம்.

Work Permit ஐப் பொருத்தவகையில், Working Days எனின் ஒரு நாளினுள்ளேயே பெரும்பாலும் Approval Status காட்டிவிடும்.

Status ஆனது Pending, Approve அல்லது Reject ஆக கூட இருக்கலாம்.

முதலில், Apply செய்தவுடன் Pending என Status ஆனது மனிதவள அமைச்சு வெப்சைட்டில் காட்டும்.

அதன் பின்னர் Status ஆனது Approve அல்லது Reject ஆக மாறும்.

PCM Permit, Shipyard போன்றவையும் கூட ஒரு நாளிலேயே பெரும்பாலும் Approve ஆகிவிடும். அதிக பட்சமாக 3 நாட்கள் வரை நீங்கள் காத்திருந்து Statusஐப் பார்க்க முடியும்.

அதன் பின்னர் கூட Status ஆனது காட்டவில்லை என்றால் நீங்கள் ஏஜண்டை Contact செய்து கேட்க வேண்டும். 

TEP Pass, TWP என்பவை கூட பெரும்பாலும் ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள்ளேயே Approve ஆகி விடும். 

அதிகபட்சமாக இது இரண்டு வாரங்கள் வரை Approve ஆகுவதற்கு எடுத்துக்கொள்ளும்.

S Pass, E Pass என்பவை ஏனைய Pass களுடன் ஒப்பிடும் போது சற்று அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.

பெரும்பாலும் S Pass, E Pass என்பவை இரண்டு வாரத்தினுள்ளேயே Approve ஆகிவிடும். 

ஆனால் சில சமயங்களில் ஒரு மாதத்திற்கு அதிகமாகவே ஆகலாம்.

ஒவ்வொரு Pass க்கும் மேற்குறிப்பிட்ட நாட்களினுள்ளே மனிதவள அமைச்சகத்தின் வெப்சைட்டில் Statusயே (Pending அல்லது Reject) காட்டவில்லை எனின் கட்டாயம் ஏஜண்டை தொடர்பு கொண்டு கேட்பது நல்லது.

சில சமங்களில் போலி ஏஜண்டின் ஊடாக Apply செய்தால் Status எலாம் காட்டது. “No Record Found” என்றே காட்டும்.

ஏஜண்ட் தெரிவுசெய்யும் போது மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments