Thursday, November 21, 2024
Homeசிங்கப்பூர்2024ல் சிங்கப்பூரில் SOC (Safety)யில் வந்த புதிய விதிமுறைகள்! Class, Exam எப்படி? Pass ஆகலாமா?

2024ல் சிங்கப்பூரில் SOC (Safety)யில் வந்த புதிய விதிமுறைகள்! Class, Exam எப்படி? Pass ஆகலாமா?

சிங்கப்பூரில் உடல் உழைப்புடன் சார்ந்த எந்த வேலைக்கு போனாலும் சரி, பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் சிங்கப்பூர் அரசு மிக கவனமாக இருக்கும்.

முக்கியமாக கட்டுமான பணிகளின் போது அதிக கவனம் செலுத்தப்படும்.

ஏனெனில், கட்டுமான தளத்தில் தான் அதிகளவான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறன. 

என்ன வேலை எடுத்துக்கொண்டாலும் சரிதான், அதில் பாதுகாப்பு வரைமுறைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

அந்தவகையில், சிங்கப்பூர் அரசினால் பாதுகாப்பை உறுதி செய்ய நடைமுறையில் உள்ள ஒன்றுதான் இந்த SOC (Safety Orientation Course) ஆகும்.

SOC இல் 2024ல் சில புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

SOC க்கு என Class நடைபெறும். அந்த Classகளில் பங்குபற்றி Exam எழுதி SOCல் Pass ஆக வேண்டும்.

Safety என்பது மிக மிக முக்கியமான அம்சமாகும். SOCயில் Pass ஆகினால் தான் வேலைத்தளத்தினுள்ளேயே அனுமதிக்கப்படுவீர்கள்.

Fail ஆகும் பட்சத்தில் நீங்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவீர்கள். ஆரம்பத்தில் கம்பனி உங்களுக்கான இந்த SOC Class, Exam க்கு பணம் கட்டும்.

Fail ஆகும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய பணத்தைக் கட்டி மீண்டும் முயற்சிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தடவைகள் நீங்கள் மீண்டும் மீண்டும் Exam எழுத முடியும்.

முன்னர் SOC ஆனது ஒரே நாளில் நடைபெறும். ஆனால் தற்போது இரண்டு நாட்களில் நடைபெறுகிறது. 

முதல் நாளில் Safety தொடர்பான அனைத்து விடயங்களும் கற்பிக்கப்படும். பின்னர் மறுநாள் Practical Theory Exam நடைபெறும்.

முன்னர் Exam என்பது Paper, Pen பயன்படுத்தி எழுத வேண்டியிருந்தது. ஆனால் தற்போது Tabயிலே கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளிக்கும் விதமாக Exam அமைகிறது.

Exam இற்கு 1 மணிநேரம் தரப்படும். அந்த நேரத்தினுள் விடையளிக்கப்பட வேண்டும்.

60% புள்ளிகள் பெறும் பட்சத்தில் Pass ஆக கருதப்படும். அதாவது கேட்கப்படும் 40 கேள்விகளில் 24 கேள்விகளுக்கு மேல் சரியான விடை அளித்திருக்க வேண்டும்.

1 மணிநேரம் முடிந்த பின்னர் உடனடியாக வினாக்கள் திருத்தப்பட்டு Results என்பது காண்பிக்கப்படும்.

Pass எனில் நீங்கள் வேலைத்தளத்தில் சென்று வேலை செய்யலாம். Fail ஆகும் பட்சத்தில் மீண்டும் Safety Class இல் பங்குபற்றி மீண்டும் Exam எழுத வேண்டியிருக்கும்.

ஆரம்ப காலத்தில் Pass ஆகும் விகிதம் அதிகமாகவே இருந்தது. ஆனால், தற்போது அது குறைவாகவே உள்ளது.

சரியான முறையில் Safety Class ஐக் கவனித்து Exam எழுதுவதன் மூலம் இலகுவாக Pass ஆக முடியும்.

மேலும் வாசிக்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments